பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை வழங்கிய 2 ஊழியர்களை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


மக்களவைத் தேர்தலையொட்டி மோடியிடன் படம் இடம்பெற்றுள்ள ரயில் பயணச்சீட்டுகள், தேநீர் கோப்பைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.


இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், பராபங்கி ரயில் நிலையத்தில் நேற்று கொடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகளில் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில் இரண்டு ஊழியர்களை ரயில்வே நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.