ஸ்டோக்ஹோம்: 2019 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களான வில்லியம் ஜி கைலின் ஜூனியர், சர் பீட்டர் ஜே ராட்க்ளிஃப் மற்றும் கிரெக் எல் செமென்சா ஆகியோருக்கு இன்று (திங்கள்கிழமை) இன்று அறிவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"உடலில் ஆக்ஸிஜன் கிடைக்கும் அளவை பொறுத்து செல்கள் மாற்றி தகவமைத்து கொள்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக" இந்த மூன்று பேருக்கும் மதிப்புமிக்க பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது என நோபல் பரிசு நடுவர் ஜூரி கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், "ஆக்ஸிஜன் அளவுகள் செல்லுலார் வளர்சிதை மாற்றம் மற்றும் உடலியல் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை ஆகும். அவர்களின் கண்டுபிடிப்பால், "இரத்த சோகை, புற்றுநோய் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய உத்திகளை உறுதிப்படுத்த வழிவகுத்துள்ளன" எனக் கூறினார்.


2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 7 முதல் வரும் வாரங்களில் இன்னும் மற்ற துறைகளுக்கு அறிவிக்கப்பட உள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும், வேதியியலுக்கான நோபல் பரிசு அக்டோபர் 9 ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.