ராஜஸ்தான் அரசு, வீட்டுக் காவலர் படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மொத்தம் 2500 காலியிடங்கள் இருப்பதாகவும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க 8-ஆம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்ணப்பிப்பதற்கான செயல்முறை ஏப்ரல் 7 துவங்கி 2020 மே 6-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு குறிப்பிடுகிறது. 


விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் sso.rajasthan.gov.in அல்லது recruitment2.rajasthan.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



தேர்வின் முதல் பகுதியாக உடல் திறன் சோதனை (PET)-க்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அதன்பிறகு உடல் தர சோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அறிவிப்பு தெரிவிக்கின்றது.


  • முக்கிய நாட்கள்:


ஆன்லைன் விண்ணப்பங்கள் துவங்கும் நாள் -ஏப்ரல் 7
ஆன்லைன் விண்ணப்பங்கள் முடிவடையும் நாள் - மே 6


  • உடல் தகுதி:


---ஆண்: 
உயரம்: 168 செ.மீ.
மார்பு: 81 செ.மீ மற்றும் 86 செ.மீ.


--பெண்: 
உயரம்: 152 செ.மீ.
எடை: 47.5 கிலோ


"வீட்டுக் காவலர்கள்" என்பது தன்னார்வப் படையாகும், இது 1946 டிசம்பரில் முதன்முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது உள்நாட்டு இடையூறு மற்றும் வகுப்புக் கலவரங்களைக் கட்டுப்படுத்த காவல்துறைக்கு உதவும் படைகள் ஆகும். 


முன்னதாக., 1962-ல் சீன ஆக்கிரமிப்பை அடுத்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தங்களது இருக்கும் தன்னார்வ அமைப்புகளை வீட்டுக் காவலர்கள் என்று அழைக்கப்படும் ஒரே சீரான தன்னார்வப் படையாக இணைக்குமாறு மையம் அறிவுறுத்தியது.