விரைவில் கிடைக்கவுள்ளது 5 lakh ரூபாய்க்கான இலவச mediclaim: குறிப்புக் காட்டியது IRDAI
தனியார் துறையைப் பற்றி மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படியான நோயறிதல்கள் செய்யப்படுகின்றன என அவர்கள் நினைக்கிறார்கள்.
IRDAI விரைவில் ஒரு அருமையான செயல்முறையை உருவாக்கவுள்ளது. இதன் மூலம் பணிபுரியும் மக்களுக்கு (Working Class) இலவச மருத்துவ உரிமை (Mediclaim) கிடைக்கும்.
MSME தொழிலாளர்களுக்கும் இந்த காப்பீட்டு வசதிகளை அறிமுகப்படுத்துமாறு IRDA தலைவர் சுபாஷ் குந்தியா காப்பீட்டு நிறுவனங்களை கேட்டுக் கொண்டார். MSME –க்களுடன் இணைந்து, நிறுவனங்கள் இதற்காக மலிவு காப்பீட்டுக் கொள்கையை வழங்க முடியும் என்று அவர் கூறினார். இதுபோன்ற அதிக காப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்த நான் காப்பீட்டு நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று குந்தியா CII நிகழ்வில் கூறினார்.
குந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனம் ஒரு ஊழியருக்கு மாதத்திற்கு ரூ .10,000 சம்பளம் வழங்க முடியுமானால், அத்தகைய சூழ்நிலையில், அந்த நிறுவனம் ரூ .5 லட்சம் சுகாதார காப்பீட்டுக் கொள்கையையும் வழங்க முடியும். அதன் பிரீமியத்தில் அதிக செலவும் இருக்காது.
IRDAI-ன் படி, நிறுவனங்கள் பிரீமியத்தின் சுமையை எளிதில் தாங்க முடியும். MSME தொழிலாளர்களை சுகாதார காப்பீட்டின் கீழ் கொண்டுவருவதற்கு இது ஒரு பெரிய படியாக இருக்கும்.
குந்தியாவைப் பொறுத்தவரை, தனியார் துறையைப் பற்றி மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படியான நோயறிதல்கள் செய்யப்படுகின்றன என அவர்கள் நினைக்கிறார்கள். ஏனெனில் ஜப்பான் போன்ற ஒரு வளர்ந்த நாட்டில் பிரசவத்தின் போது சி செக்ஷன் அதாவது அறுவை சிகிச்சை நடக்கும் பெண்களின் எண்ணிக்கை 20% மட்டுமே உள்ளது. ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 80 க்கும் அதிகமாக, 90 சதவீதம் வரைகூட உள்ளது.
நாட்டில் சுகாதார கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் குத்தியா நம்புகிறார். எனவே மருத்துவமனைகளின் தரக் கட்டுப்பாட்டில் பணியாற்ற வேண்டியது அவசியம், அதில் மருத்துவமனைகளே முன்வந்து சரியான வெளிப்பாட்டைக் கொடுக்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
ALSO READ: Health Insurance-ன் வகைகளை இனி Color Coding மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, இருதய கோளாறு போன்ற நோய்களைப் பாதுகாப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசிகளை நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு குந்தியா பரிந்துரைத்துள்ளார்.
மேலும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) ஒரு சிறப்புக் கொள்கையை உருவாக்குவது குறித்து நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.
IRDA நாட்டில் போலி காப்பீட்டு நிறுவனங்களின் போக்கை கட்டுப்படுத்தவும் பெரிய அளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஏனெனில், இந்தியாவில் சுகாதார காப்பீட்டில் மொத்த நிதி கோரல்களில் 15%, அதாவது ரூ .800 கோடி மதிப்புள்ள கோரல்கள் மோசடிகளாக உள்ளன. இது பொது பாலிசிதாரர்களையும் பாதிக்கிறது.
இதைத் தடுக்க, காப்பீட்டு நிறுவனங்களும், தேசிய சுகாதார அதிகாரசபையும் ஒன்றிணைந்து ஒரு மையப்படுத்தப்பட்ட தரவு தளத்தை உருவாக்குகின்றன. இந்த சுகாதார தகவல் அமைப்பில், காப்பீட்டு நிறுவனங்கள், TPA, மருத்துவமனைகள், NDHM ஆகிய அமியப்புகள் ஒன்று சேரும். புதிய அமைப்பு மூலம் மோசடி செய்பவர்கள் நேரடியாக தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
ALSO READ: Health Insurance எடுக்கப் போறீங்களா? என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR