ஆண்களே! இந்த 5 தவறை தீபாவளி நாளில் செய்துவிடாதீர்கள்..!
Diwali | தீபாவளி பண்டிகையின்போது ஆண்கள் இந்த 5 தவறுகளை மட்டும் மறந்தும் செய்துவிடவே கூடாது, குடும்பமே மகிழ்ச்சியில்லாமல் சோகத்தில் மூழ்கிவிடும்.
Diwali mistakes | எல்லோரது வீடுகளிலும் மகிழ்ச்சி, இன்பத்தை கொண்டு வரும் தீபாவளி திருநாளில் தான் சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரே வீட்டில் குழுமி சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் குடும்பத்தில் ஒரு சிலர் செய்யக்கூடிய தவறுகளால் சோகத்தில் முடியவும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக ஆண்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியையும் சீர்குலைத்துவிடும். அதனால், ஆண்கள் தீபாவளி நாளில் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஆண்கள் தீபாவளி அன்று என்ன செய்யக்கூடாது?
1. அதிகப்படியான பட்டாசுகளை வெடித்தல்
தீபாவளி கொண்டாட பட்டாசுகளை எல்லோரும் வெடிப்பார்கள். ஆனால், ஆண்கள் கொண்டாட்டங்களின் மிகுதியில் கையில் பிடித்து பட்டாசுகளை வெடிப்பது, கண்ணாடி பாட்டில்களை பட்டாசுகள் மீது வைத்து வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எல்லாநேரமும் உங்களுக்கானதாகவே இருக்காது. பட்டாசு விஷயத்தில் செய்யக்கூடிய சிறிய தவறு உங்களை வாழ்நாள் முழுவதும் முடமாக்கிவிடும். விபத்து நடந்த பிறகு யோசிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அத்துடன், மாசு ஏற்படுவதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அருகில் ஆடு மாடுகள் இருந்தால் பட்டாசு காரணமாக அவை மிகுந்த பயத்திற்குள்ளாகும். அதனையும் கருத்தில் கொண்டு பட்டாசு வெடியுங்கள், பட்டாசு வெடிக்கும்போது விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்.
2. பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது
தீபாவளி பண்டிகையின்போது தான் தீக்காயங்கள் அதிகம் ஏற்படும். தீ விபத்துகளும் அதிகம் ஏற்படும். அதனால், அது குறித்து விழிப்பாக இருப்பது அவசியம்.
எனவே, திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கவும், தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லாத இடங்களில் விளக்குகளை ஏற்றவும். விளக்குகளுக்கு அருகில் எப்போதும் கவனமாக செல்ல வேண்டும். வீட்டில் அல்லது முற்றத்தில் எப்பொழுதும் ஒரு வாளி தண்ணீரை உங்களுடன் வைத்திருக்கவும் அல்லது முன்கூட்டியே ஒரு தீயை அணைக்கும் கருவியை வாங்கி வைத்திருப்பதும் நல்ல விஷயம் தான்.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்
3. அதிக செலவு செய்தல்
தீபாவளியன்று சொந்த பந்தகளுக்கு பரிசுகளை வழங்குவது ஒரு பாரம்பரியம் தான். ஆனால் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என யோசித்து வாங்குவது அவசியம். அநாவசிய செலவுகள் உங்கள் குடும்ப செலவுகளை அதிகரிக்கும். கடன் வாங்கி யாருக்கும் பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டாம். சில நேரங்களில் சிந்திக்காமல் பரிசுகளை வழங்குவதால் செலவுகள் அதிகரிப்பதுடன், அந்த பரிசுகள் மற்றவர்களுக்கு பயன்படாமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. உங்களின் குடும்ப சூழல், மற்றவர்களின் விருப்பங்கள் என எல்லாவற்றையும் மனதில் கொள்ளுங்கள்.
5. மது அருந்துதல்
சிலர் தீபாவளியன்று மது அருந்துகிறார்கள், இந்த சமூகக் கொடுமை. நிரந்தரமாக விட்டுவிடுவது நல்லது. குறைந்தபட்சம் தீபாவளியை முன்னிட்டாவது குடிக்காமல் இருக்கலாம். குடும்பத்தினருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடன் நேரம் செலவிடலாம். அதைவிடுத்து உங்களின் ஒருவர் மகிழ்ச்சிக்காக பணத்தையும் செலவு செய்து குடும்பத்தின் நிம்மதியையும் சீரழித்துவிடாதீர்கள்.
5. சூதாட்டம்
தீபாவளியை முன்னிட்டு சிலர் சூதாட்டத்தில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் நஷ்டம் அடைகின்றனர். இது அவர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பத்தையே மிகப்பெரிய கடனில் தள்ளிவிடும். இந்த விஷயங்களை எல்லாம் தவிர்த்து குடும்பத்தோடு மகிழ்ச்சியாக தீப ஒளி திருவிழாவை கொண்டாடி மகிழுங்கள்.
மேலும் படிக்க | உடல் பருமனால் ஆண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ