நாய் தாக்குதலில் இருந்து தங்கையை காப்பாற்றிய 6 வயது சிறுவன்..!
நாயுடன் சண்டைப் போட்டு தங்கையை காப்பாற்றிய ஆறுவயது வீரச்சிறுவனின் புகைப்படம் வைரலாகி வருகிறது...!
நாயுடன் சண்டைப் போட்டு தங்கையை காப்பாற்றிய ஆறுவயது வீரச்சிறுவனின் புகைப்படம் வைரலாகி வருகிறது...!
அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் பிரிட்ஜர், தனது தங்கையை கடிக்க வந்த நாயைப் பார்த்துவிட்டு பயந்து ஓடாமல், தனது உயிரை பணையம் வைத்து தனது தங்கையின் உயிரை காப்பாற்றி உள்ளார். நாய் தலையிலும், முகத்திலும் கடித்தாலும் கூட, கொஞ்சமும் பயப்படாமல் நாயுடன் சண்டைபோட்டு தனது தங்கையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த, சிறுவனின் முகத்தில் சுமார் 90 தையல்கள் போடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வையோமிங் மாகாணத்தில் சயன் நகரில் வசித்து வருபவர் 6 வயதுடைய பிரிட்ஜர் வாக்கர் (Bridger Walker). இவரது தங்கையை ஒரு நாய் கடிக்க வருவதை கண்டார். அதை கண்ட அந்த சிறுவன் நாயை தடுக்க முயன்றார். அப்போது, அந்த நாய் பிரிட்ஜின் முகத்தில் நகத்தால் கீறி காயத்தை ஏற்படுத்தியது. எனினும், பிரிட்ஜ் தனது தங்கையின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான். இது குறித்த புகைப்படத்தை பிரிட்ஜின் அத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.
அதில், என் சகோதரரின் மகன் ஒரு ஹீரோ. நாயிடமிருந்து தனது தங்கையை காப்பாற்றியிருக்கிறான். தங்கையை காப்பாற்ற சென்று நாயிடம் அவன் தான் அதிகமாக அதன் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது குறித்து சிறுவன் கூறுகையில், அங்கு யாராவது இறந்த போக வேண்டும் என சூழல் இருந்திருந்தால் அது நானாக இருந்துவிட்டு போகலாம் என நினைத்தேன் என கூறியுள்ளார்.
READ | COVID-19 தோற்றுக்கான புதிய அறிகுறி அறிவிப்பு... நீளும் Symptoms பட்டியல்...
நேற்று தான் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். அவென்ஞர்ஸ் உள்பட ஹீரோக்களிடம் பிரிட்ஜின் சாகசத்தை கொண்டு சேர்க்க விரும்புகிறேன். அவர்களுக்கு துணையாக இன்னொரு நாயகன் பிரிட்ஜ் வந்துவிட்டான் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றார்" சிறுவனின் அத்தை.
இந்த சிறுவனின் சாகச கதையை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறுவனின் அத்தை ஹாலிவுட் நடிகர்களான டாம் ஹாலந்து, கிரிஷம்ஸ்வொர்த், ராபர்ட் டவுனி, மார்க் ரஃபல்லோ, சாட்விக் போஸ்மேன் உள்ளிட்டோருக்கு டேக் செய்துள்ளார். நாய் தாக்கியதில் பிரிட்ஜரின் முகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் முகத்தில் சுமார் 90 தையல்கள் போடப்பட்டுள்ளது.