இந்த வங்கியில் எஃப்டிகளுக்கு 7.99 சதவீதம் வரை வட்டி தருதாம்
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தியதை அடுத்து பல வங்கிகள் ஏற்கனவே வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்ற மகாராஷ்டிராவில் உள்ள ஒரே சிறு நிதி வங்கி சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இதுவாகும்.
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி எஃப்.டி மீதான புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 6 முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. இது தொடர்பான தகவல்களை வங்கி தனது செய்திக்குறிப்பு ஒன்றில் பகிர்ந்துள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு, வங்கி 999 நாட்களுக்கு 2 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளுக்கு 7.99 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோல் இந்த வயதிற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற நபர்களும் இந்த வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | Bank Holidays in June 2022: ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது
இந்த நிலையில் இந்த வங்கியைப் பற்றி பேசுகையில், இது எஃப்.டிக்கு அதிக வட்டி விகித வங்கியாகும். மற்ற அனைத்து வங்கிகளும் இதை விட குறைவான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ விகிதங்களை அதிகரிக்கலாம் என்று கருதப்படும் நேரத்தில் சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இம்முறை எஃப்டியின் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதனுடன், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, உங்கள் அருகிலுள்ள சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி கிளையில் பேசலாம் அல்லது 1800-266-7711 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2 கோடிக்கு மேல் வைப்புத்தொகைக்கு எவ்வளவு வட்டி
* 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: சாதாரண மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
* 15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: சாதாரண மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
* 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: சாதாரண மக்களுக்கு - 4.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்
* 91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை : சாதாரண மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
* 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்
* 9 மாதங்களுக்கு மேல் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
* 1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதங்கள்: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்
* 1 வருடம் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்
* 2 ஆண்டுகள் முதல் 998 நாட்கள் வரை: சாதாரண மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
* 999 நாட்கள்: சாதாரண மக்களுக்கு - 7.49 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.99 சதவீதம்
* 1000 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை: சாதாரண மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.80 சதவீதம்
* 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவாக: சாதாரண மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்
* 5 ஆண்டுகளுக்கு: சாதாரண மக்களுக்கு - 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.25 சதவீதம்
* 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR