அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு.. 4% DA ஹைக், சம்பளம் உயர்வு
மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
7வது சம்பள கமிஷன் சமீபத்திய அப்டேட்: புத்தாண்டு தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அம்மாநிலத்தைச் சேர்ந்த 14 லட்சம் ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளார். அதன்படி தனது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1, 2024 முதல் 4 சதவீதம் உயர்த்துவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அந்த வகையில் மாநில அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பரிசுகளை முதல்வர் வியாழக்கிழமை வழங்கினார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா கிறிஸ்மஸ் கார்னிவல் 2023 இன் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் நடைபெறும் விழாவில் வெளியிட்டார். இது தொடர்பாக பானர்ஜி கூறுகையில், மாநில அரசின் 14 லட்சம் ஊழியர்கள், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அனைத்து அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் ஜனவரி 1, 2024 முதல் நான்கு சதவீத அகவிலைப்படியை மற்றொரு தவணையாகப் பெறுவார்கள் என்று அறிவிக்கிறேன் என்றார்.
டிஏ உயர்வுக்காக ரூ.2,400 கோடி கூடுதல் செலவை தனது அரசு ஏற்க வேண்டும் என்று டிஎம்சி தலைவர் கூறினார். இதனிடையே பிடிஐ செய்தியின்படி, டிஏ எங்களுக்கு கட்டாயமில்லை, ஆனால் விருப்பமானது. ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு நான்கு சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறோம். மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை உயர்த்தக் கோரி கிட்டத்தட்ட ஒரு வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | நாம் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரியின் புதிய விதிகள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு எப்போது?
இதனிடையே தமிழக அரசின் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது 46 சதவீதம் அகவிலைப் படியை தமிழக அரசு ஊழியர்கள் பெற்று வருகிறார்கள்.
ஆனால் தற்போது தமிழகத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை மற்றும் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 உதவித்தொகை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும் நிலை உள்ளதால், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்குவதில் கால தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் வரும் இரட்டை பரிசு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு சமயத்தில் மிகப் பெரிய பரிசை அரசு அறிவிக்கவிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், இன்னொரு பரிசும் அவர்களுக்குக் காத்திருக்கிறது. அதன்படி 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைவில் செலுத்தவிருப்பதால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். புத்தாண்டு அதுவுமாக இந்த அறிவிப்பு வெளியானால் இது அவர்களுக்கு மிகப் பெரிய பரிசாக இருக்கும். இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும். இதுமட்டுமின்றி, ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் ஃபிட்மென்ட் காரணியையும் மத்திய அரசு கணிசமாக அதிகரிக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட் RAC ஆ இருக்க? அப்போ கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ