7th Pay Commission: கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான பயணப்படி விடுமுறை திட்டத்தில் பண வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இனி மத்திய ஊழியர்கள் இந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பண வவுச்சர் திட்டம் என்றால் என்ன


இந்த திட்டம் 2020 அக்டோபர் 12 அன்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் பின்னர் தனியார் மற்றும் பிற அரசு ஊழியர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். பட்ஜெட் உரையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக LTC-க்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்தத் திட்டம் அரசு ஊழியர்களிடம் பண இருப்பை அதிகரிக்கும் என அரசாங்கம் நம்புகிறது.


பண இருப்பு அதிகரித்தால் அவர்களது செலவு செய்யும் திறனும் அதிகரிக்கும். இதனால் முழுவதுமாக ஒட்டுமொத்த பொருளாதாரமும் பயனடைகிறது. கொரோனா காரணமாக எல்.டி.சி யைப் பயன்படுத்த முடியாத ஊழியர்களுக்கு, பயணப்படி விடுப்பு திட்டத்தில் பண வவுச்சர் திட்டத்தின் நன்மை வழங்கப்படும்.


LTC என்றால் என்ன


மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) 4 ஆண்டுகளில் LTC அதாவது விடுமுறை பயணப்படி கிடைக்கிறது. இதன் கீழ், இந்த நேரத்தில், அவர்கள் நாட்டில் எங்கும் பயணம் செய்யலாம். இந்த நேரத்தில், ஊழியர் தனது சொந்த ஊருக்கு இரண்டு முறை செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பயணக் கொடுப்பனவில், விமானப் பயணம் மற்றும் இரயில் பயணச் செலவை ஊழியர் பெறுகிறார். இதன் மூலம், ஊழியர்களுக்கு 10 நாள் பி.எல் (சிறப்புரிமை விடுப்பு) கிடைக்கிறது.


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, TA உயர்வு பற்றிய முக்கிய செய்தி


பண வவுச்சர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள்


LTC-க்கு பதிலாக ஊழியர்களுக்கு ரொக்கமாக தொகை கொடுக்கப்படும்


- பணியாளரின் கிரேடிற்கு ஏற்ப பயண தொகை கொடுக்கப்படும்


- இந்த தொகைக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்படும்.


- இந்தத் திட்டத்தின் பயனைப் பெறும் ஊழியர்கள் மூன்று மடங்கு தொகையை செலவிட வேண்டியிருக்கும்.


- விடுப்புக்கு பதிலாக தொகையைப் பெற அதன் தொகை அளவிலான பணத்தை செலவழிக்க வேண்டும்.   


- 2021 மார்ச் 31 க்கு முன் தொகையை செலவிட வேண்டியிருக்கும்


- ஊழியர்கள் 12% அல்லது அதற்கு மேற்பட்ட GST-யை ஈர்க்கும் பொருட்களில் தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும்


- ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர் அல்லது வணிகரிடமிருந்து மட்டுமே சேவைகள் அல்லது பொருட்களை வாங்க முடியும்


- சேவைகள் அல்லது பொருட்களை வாங்குவதும் டிஜிட்டல் முறையில் செய்யப்பட வேண்டும்


- பயணப்படி அல்லது விடுப்பு கொடுப்பனவு கோரும்போது ஜிஎஸ்டி ரசீது வழங்கப்பட வேண்டும்.


ALSO READ: Recruitment 2021: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் 185 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR