7th Pay Commission Latest News: மருத்துவ சிகிச்சைகளைப் பெற சி.எச்.ஜி.எஸ் (மத்திய அரசு சுகாதார திட்டம்) உடன் பட்டியலிடப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு பதிலாக ஒரு தனியார் மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்ததால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சுகாதார காப்பீட்டு சலுகைகளை (Mediclaim) மறுக்க முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊழியர்களுக்கு, இந்த கொடுப்பனவு நிவாரணம் ஒரு மிகப்பெரிய நற்செய்தியாக வந்திருக்கும். உச்ச நீதிமன்றம் சனிக்கிழமையன்று தனது தீர்ப்பை வழங்கியது. ஒரு வேளை, பயனாளி CGHS பேனலுக்கு வெளியே உள்ள ஒரு மருத்துவமனையில் (தனியார் உட்பட) சிகிச்சைக்காக சென்றால், அவருக்கு (ஒரு மத்திய அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரருக்கு) யாரும் அவர்களின் உரிமைகளை (இங்கு மெடிகிளைம்) மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) கூறியது.


சிஜிஹெச்எஸ்-எம்பனேல் செய்யப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலில் இல்லாத ஒரு மருத்துவமனையிலிருந்து ஒரு மத்திய அரசு ஊழியர் சிகிச்சை பெற்றால், அவருக்கு அந்த சிகிச்சைக்கான பணம் அளிக்கப்பட வேண்டும், அதை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது. ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) அல்லது ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும்.


"சிகிச்சைப் பெற்ற மருத்துவமனையின் பெயர் அரசாங்க உத்தரவில் இல்லை என்ற காரணத்திற்காக மருத்துவ க்ளெய்மிற்கான உரிமையை மறுக்க முடியாது" என்று நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.


ALSO READ: உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டதா? இனி NO Tension!


குறிப்பிடத்தக்க வகையில், ஒரு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் கூறும் கூற்று சான்றளிக்கப்பட்ட மருத்துவர் அல்லது மருத்துவமனையின் பதிவில் உள்ளதா இல்லையா என்பதை அரசாங்கம் சரிபார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மேலும் கூறியது.


சம்பந்தப்பட்ட ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர் உண்மையில் சிகிச்சை எடுத்தாரா இல்லையா என்பதையும் அரசாங்கத்தால் சரிபார்க்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த உண்மைகளின் அடிப்படையில், ஒரு ஊழியர் அல்லது ஓய்வூதியம் (Pension) பெறுவோருக்கு மெடிகிளைம் வழங்கப்படலாம் அல்லது மறுக்கப்படலாம்.


ஒரு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பெரிய மருத்துவ உரிமை நிவாரணத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அவர் ​​இரண்டு தனியார் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று மருத்துவ கட்டணங்களுக்கான பணத்தை திரும்பக் கோரியிருந்தார்.


ALSO READ: இந்த மாநில மக்களின் வங்கி கணக்கில் 3 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும்: FM நிர்மலா!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR