7வது ஊதியக்குழு சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அரசு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனுடன் ஜனவரி 2022 முதல் மார்ச் 2022 வரையிலான டிஏ அரியர் தொகைக்கும் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது அடுத்ததாக ஜூலை மாதத்தில் டிஏ உயர்த்தப்படும் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.


ஜூலையில் டிஏ உயர்வு இருக்காது?


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. முதல் திருத்தம் ஜனவரி முதல் ஜூன் வரை இருக்கும். இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்துக்கு இருக்கும். ஜனவரி மாதத்துக்கான டிஏ திருத்தம் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. 


ஜூலையில் மீண்டும் அடுத்த திருத்தம் செய்யப்படும். இதற்கிடையில், அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இப்போதுதான் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகள் வந்துள்ளன. இவை டிசம்பர் 2021 உடன் ஒப்பிடுகையில் சரிவைக் காட்டுகின்றன.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, 13% டிஏ ஹைக் 


ஏஐசிபிஐ எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது?


டிசம்பர் 2021 இல், AICPI எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. ஜனவரி 2022 இல், இது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக இருந்தது. இதற்குப் பிறகு, பிப்ரவரியிலும் 0.1 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. தொடர்ச்சியான இரண்டு மாத சரிவு காரணமாக, ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு ஏற்படாமல் போக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐசிபிஐ எண்ணிக்கை இதற்கும் கீழே சென்றால், டிஏ அதிகரிப்பு இருக்காது. குறியீட்டு எண் 124க்கு கீழே சென்றாலும் அகவ்விலைப்படி மாறாமல் இருக்ககூடும். 


ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் இப்படித்தான் தீர்மானிக்கப்படுகின்றன


அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள், நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் அமைந்துள்ள 317 சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. 88 மையங்களுக்கும், நாடு முழுவதற்குமான குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஏஐசிபிஐ-இன் இந்தத் தரவு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் வெளியிடப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, ஊதிய உயர்வுக்கான சூத்திரத்தில் மாற்றம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR