அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிள் புத்தகத்தை மத்திய புலனாய்வு போலீசார் நெதர்லாந்தில் மீட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கார்னிஜே என்ற நூலகம் உள்ளது. இந்த  நூலகத்தில் பழமைவாய்ந்த புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


கடந்த 1990-ம் ஆண்டு இந்த நூலகத்தில் ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டாலர் மதிப்புடைய 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை திருடி சென்றனர். அதில் அந்த  404 ஆண்டுகள் பழமையான பைபிளும் அடங்கும்.


இதையொட்டி கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தனர். இந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், கார்னிஜே நூலகத்தில் இருந்து திருடப்பட்ட 404 ஆண்டுகள் பழமையான பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.