அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கைக் கொண்டு இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக அமைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது. 28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையுடன் விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காகும்.



இந்த நிலையில், தற்போது இந்த உருளைக் கிழங்கு இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தங்கும் விடுதியில், சொகுசு இருக்கைகள், படுக்கை மற்றும் கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 200 டாலர் வசூலிக்கப்படுகிறது.