இந்திய ரயில்வேயிடம் குறை இருப்பதாக கூறி கேள்விகேட்ட பயணிக்கு, ரயில்வேத்துறை அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரயில்வேயில் பயணம் செய்ய வேண்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்காக ஆனந்த்குமார் என்பவர் தனது செல்போன் மூலம் ரயில்வே ஆப்பில் சென்றிருக்கிறார். அப்போது அந்த ரயில்வே ஆப்பில் ஆபாச  விளம்பரங்கள் வந்துள்ளது. 


இதனையடுத்து ஆனந்த், ரெயில்வேயின் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி பதில் பகுதியில் செல்போனில் இருந்த படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சுட்டிக்காட்டி, பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யும்போது  மிகவும் ஆபாசமான விளம்பரங்கள் தொடர்ச்சியாக காட்சியாகிறது. இது அருவருப்பாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்த ரயில்வேத்துறை, இந்திய ரயில்வே விளம்பரங்களுக்காக கூகுள் விளம்பர சேவையை பயன்படுத்துகிறது. உங்கள் கூகுள் வரலாறு, குக்கீஸ் ஆகியவற்றை பொருத்தே இந்த விளம்பரங்கள் காட்சியாகும். இதுபோன்ற விளம்பரங்கள் மீண்டும் தோன்றாமல் இருக்க உங்கள் கூகுள் வரலாறு, குக்கீஸ் ஆகியவற்றை தயவுசெய்து அழித்து விடுங்கள் என அதிரடியாக கூறியுள்ளது. 


தற்போது ரயில்வேத்துறை அளித்துள்ள இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.