கொரோனா லாக் டவுன் கால கட்டத்தில், மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப எந்த விலையும் கொடுக்க தயாராக உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு சுவரஸ்யமான செய்தி வெளிவந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்து வந்த ஒரு நபர் ஒருவர் தனது குடும்பத்தினர் நான்கு பேரை போபாலில் இருந்து டெல்லிக்கு அழைத்து வர 180 இருக்கைகள் கொண்ட ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்துள்ளார்.


போபாலைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் தான் இந்த காரியத்தை செய்துள்ளது. தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும், வீட்டுப் பணியாளரையும் டெல்லிக்கு அனுப்ப ஒரு தனியார் நிறுவனத்தின் 180 இருக்கைகள் கொண்ட A320 விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். கொரோனா காரணமாக லாக்டவுனினால் தொழிலதிபரின் குடும்பம் கடந்த 2 மாதங்களாக போபாலில் சிக்கி தவித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
 
இந்த விமானம் போபாலில் இருந்து டெல்லிக்கு 4 பயணிகளுடன்  திங்கள்கிழமை  பறந்தது. ஏர்பஸ்-320 ன் வாடகை  கட்டணம் சுமார் 20 லட்சம் ரூபாய் என்று விமான  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


குடும்பத்தில் யாருக்கேனும் மருத்துவ அவசரநிலை இருந்ததா என கேட்டபோது, அந்த விமான அதிகாரி, "விமானத்தில் இருந்தவர்களுக்கு எந்த வகையான மருத்துவ அவசர தேவையும் இல்லை" என்று கூறுகிறார்.


கிட்டத்தட்ட  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, உள்நாட்டு  விமான சேவைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.


மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனோ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,261-ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு  இறப்பு எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தொழிலதிபர் தனது குடும்பத்தை டெல்லி அழைத்து வருவதற்காக மட்டும் சுமார் 20 லட்சம் செலவு செய்துள்ளார்.


மொழியாக்கம் – தெய்வ பிந்தியா.த