Aadhaar-ல் 2 முக்கிய சேவைகளை நிறுத்தியது UIDAI: வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சிக்கல்
UIDAI சமீபத்தில் ஆதார் தொடர்பான இரண்டு சேவைகளை காலவரையின்றி நிறுத்தியது. இது அனைத்து ஆதார் அட்டைதாரர்களையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
UIDAI Latest News: நமது நாட்டில் ஆதார் அட்டை இன்றைய காலத்தில் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கியில் நாம் மேற்கொள்ளும் பணிகளுக்கும் அரசிடமிருந்து பெறும் சேவைகள் மற்றும் உதவிகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது.
ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட வேண்டும். இதன் கீழ், UIDAI அவ்வப்போது ஆதார் தொடர்பாக மாற்றங்களைச் செய்து வருகிறது. இதற்கிடையில், UIDAI சமீபத்தில் ஆதார் தொடர்பான இரண்டு சேவைகளை காலவரையின்றி நிறுத்தியது. இது அனைத்து ஆதார் அட்டைதாரர்களையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முகவரி சரிபார்ப்பு கடிதம் (Address Validation Letter)
UIDAI ஆதார் அட்டையில், முகவரி சரிபார்ப்பு கடிதம் மூலம் முகவரியைப் புதுப்பிக்கும் வசதியை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தியுள்ளது. வாடகை வீடுகளில் இருப்பவர்கள் மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்கும் பிற பயனர்கள், இதன் மூலம் தங்கள் முகவரியை எளிதாக புதுப்பித்து வந்தார்கள். UIDAI தனது வலைத்தளத்திலிருந்து Address Validation Letter தொடர்பான ஆப்ஷனையும் நீக்கியுள்ளது. UIDAI படி, முகவரி சரிபார்ப்பு கடிதத்தின் வசதி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது.
பயனர்கள், செல்லுபடியாகும் மற்ற முகவரி சான்றுகளின் பட்டியலிலிருந்து (https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf) ஏதேனும் ஒரு முகவரி சான்று மூலம் தங்கள் முகவரியை புதுப்பிக்கலாம்.
ALSO READ: ஆதார் அட்டை தொடர்பான புதிய விதி; UIDAI வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
அனைவரையும் பாதிக்கும்
இந்த முடிவின் மூலம், மக்கள் ஆதார் அட்டையில் (Aadhaar Card) முகவரியை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்படும். குறிப்பாக வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அல்லது நீண்ட காலத்துக்கு பணி மாற்றம் செய்பவர்கள் ஆகியோருக்கு இப்போது ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பிப்பதில் பிரச்சனை ஏற்படும். முகவரியை மாற்ற வேறு எந்த ஆதாரமும் இல்லாதவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கக்கூடும்.
ஆதார் அட்டை மறுபதிப்பின் பழைய பாணியும் மூடப்பட்டது
UIDAI பழைய பாணியில் ஆதார் அட்டை மறுபதிப்பு சேவையை நிறுத்தியுள்ளது. இப்போது பழைய அட்டைக்கு பதிலாக, UIDAI பிளாஸ்டிக் PVC கார்டுகளை வெளியிடுகிறது. இந்த அட்டையை உங்களுடன் எடுத்துச் செல்வது எளிதாக இருக்கும். இது ஒரு டெபிட் கார்டு போன்று இருக்கிறது. அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இப்போது நீங்கள் இந்த புதிய அட்டையை பாக்கெட் மற்றும் வாலட்டில் எளிதாக வைத்து எடுத்துச் செல்லலாம்.
ட்விட்டரில் ஒரு பயனரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஆதார் உதவி மையம் இந்த தகவலை ட்வீட் செய்தது. 'அன்புள்ள பயனரே, Order Aadhaar Reprint நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக ஆன்லைனில் ஆதார் பிவிசி கார்டை ஆர்டர் செய்யலாம். அதே நேரத்தில், நீங்கள் விரும்பினால், நீங்கள் இ-ஆதார் பிரிண்ட் அவுட் எடுத்து காகித வடிவில் வைத்துக் கொள்ளலாம்.' என்று ஆதார் உதவி மையம் (Aadhaar Centre) பதிலளித்துள்ளது.
ALSO READ: Aadhaar எச்சரிக்கை: உங்கள் ஆதார் அட்டை போலியா? அசலா? எப்படி சரிபார்ப்பது? வழிமுறை இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR