Aadhaar Card Photo Update: ஆதார் அட்டை இன்று நம் வாழ்வின் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வரை நமது அனைத்து முக்கிய விஷயங்களுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் முதல் கைரேகை வரையிலான தகவல்கள் ஆதார் அட்டையில் உள்ளன. ஆகையால், இதில் உள்ள விவரங்களை எப்போதும் சரியாக வைத்திருப்பது மிக முக்கியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்


இந்தியாவில் வசிக்கும் எந்த வயதினரும் ஆதார் எண்ணைப் (Aadhaar Number) பெற பதிவு செய்யலாம். ஆனால் பல முறை, ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் புகைப்படம் அவர்களை அடையாளம் காட்டும் வகையில் இல்லாமல் இருக்கிறது. 


எளிதாக புகைப்படத்தை மாற்ற முடியும்


ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை மாற்ற விரும்பினால், அதை எளிதாக செய்யலாம். யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கிறது. இதற்கு நீங்கள் ஆன்லைனில் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அருகிலுள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.


ALSO READ: Aadhaar விதிகளில் மாற்றம்: மாற்றத்தால் மக்களுக்கு லாபம் 


ஆதார் அட்டையின் புகைப்படத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் 


முதலில் UIDAI இணையதளத்தில் லாக் இன் செய்து ஆதார் அட்டை படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை எழுதவும். அதன் பிறகு அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லவும். உங்கள் படிவத்தை அங்கு சமர்ப்பிக்கவும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு (PAN Card), பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமாகும்.


ஆதார் மையத்தில் URN கிடைக்கும்


ஆதார் மையங்களுக்கு உங்களுடன் ஆதார் அட்டையை எடுத்துச் செல்லுங்கள். அங்கு இருக்கும் ஊழியர் ஆதார் அட்டை வைத்திருப்பவரின் புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை எடுத்துக்கொள்வார். இதற்குப் பிறகு உங்கள் யுஆர்என் (புதுப்பிப்பு கோரிக்கை எண்) அடங்கிய ஒப்புதல் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும். ஆதார் நிலையைச் சரிபார்க்க URN-ஐப் பயன்படுத்தலாம்.


இரண்டு வாரங்களில் புதுப்பிக்கப்பட்ட ஆதார் கிடைக்கும்


அனைத்து தகவல்களும் அதன் புதுப்பித்தலுக்காக பெங்களூரு மையத்தை சென்றடையும். பின்னர் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை இரண்டு வாரங்களுக்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரியை அடையும். புகைப்படத்தை மாற்ற ரூ.25 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். புகைப்படத்தை ஆன்லைனில் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த செயல்முறை முகவரி மாற்றத்திற்கு மட்டுமே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ALSO READ: ஆதார் கார்ட் இருக்கா? அப்போ சுலபமா தனிநபர் கடன் பெற முடியும்: முழு விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR