ஆடி பெளர்ணமியன்று சந்திரனை இப்படி வழிபட்டால் கடன் தீரும்!
Raksha Bandhan: சகோதரிகளை காக்கும் உடன் பிறப்புகளை அன்பால் கட்டுப்போடும் ரக்ஷா பந்தன் நாள் இன்று
ஆடி பெளர்ணமி: ஆடி மாதம் அம்பாளுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கக்கூடிய இந்த நாளில் அம்பாள் வழிபாடு செய்வது நல்லது. குறிப்பாக கடன் தீர சந்திர பகவானை நினைத்து எப்படி வழிபடவேண்டும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். காலையிலேயே எழுந்து தலைக்கு குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, தீபம் ஏற்றி அம்மனை வணங்கி இந்த பௌர்ணமி நாளை தொடங்க வேண்டும். விரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில பரிகாரங்களை ஆடி மாத பெளர்ணமியன்று செய்வது வாழ்வில் வளங்களை சேர்க்கும்.
மாலை 6 மணிக்கு முன்பாக பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அம்மனுக்கு நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து தீபம் ஏற்றி குலதெய்வத்தையும், அம்பாளையும் வேண்டிக் கொண்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | பௌர்ணமியன்று லட்சுமி விரதம்
வீட்டில் இருப்பவர்களுக்கு திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லை, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதில் தடை இருப்பவர்கள், சிவப்பு, பச்சை, மஞ்சள் இந்த மூன்று வண்ணங்களில் வளையல்களை அம்மன் பாதங்களில் வைத்து பூஜை செய்து தானமாக கொடுக்க வேண்டும்.
வளையல் தானம் சுப காரியத் தடையை நீக்கும். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் துயரங்களை போக்கி, செல்வ செழிப்போடு சந்தோஷமாக வாழ்வதற்கு உண்டான வழியை வளையல் தானம் ஏற்பத்திக் கொடுக்கும்.
மாலை சந்திரம் உதயமான பின்பு, சுமார் ஏழு மணிக்கு ஒரு தாம்பூல தட்டில் ஒரு மஞ்சள் நிற துணியை விரித்து வைத்து விட்டு, அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1 கைப்பிடி கல் உப்பு, 1 ரூபாய் நாணயம், துளசி இலையை வைத்துவிட்டு கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | சிவபெருமானுக்கு பெளர்ணமி அன்னாபிஷேகம்
வேண்டுதலை முடித்துவிட்டு இந்த மஞ்சள் முடிச்சை ஒரு மூட்டையாக கட்டி அப்படியே நிலை வாசல் படியில் கொண்டு வந்து மாட்டி விடுங்கள். அடுத்த மாதம் பௌர்ணமி வரை அந்த முடிச்சு நிலை வாசலிலேயே இருக்கட்டும்.
அடுத்த மாதம் பௌர்ணமிக்கு முந்தைய நாள் இந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் பொருட்களை அகற்றிவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை கோவிலில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.
கடன் பிரச்சனை தீரும் வரை மாதம் மாதம் பௌர்ணமி தினத்தில் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் கடன் சுமை குறைந்து கொண்டே வரும். சுலபமான இந்த பெளர்ணமி நாள் பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் கடனை அடைக்க தேவையான வழியை சந்திர பகவான் காண்பித்துக் கொடுப்பார்.
மேலும் படிக்க | பெளர்ணமி தினத்தின் முக்கியத்துவம் என்ன?
ஆடி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று பிரபஞ்சமே நேர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும் நாளாகும். இன்று சகோதர சகோதரிகள் என்றும் ஒற்றுமையுடன் இருப்பதற்காக, ரக்ஷா பந்தன் என்ற ரக்ஷைக் கயிறை கட்டுவார்கள்.
சகோதர்களின் கையில் சகோதரிகள் கட்டும் கயிறானது உறவை பிணைக்கும் என்றால், பெளர்ணமி தினத்தன்று செய்யும் வேண்டுதல்கள் வாழ்க்கையில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை)
மேலும் படிக்க | சுக்கிரனின் அருளால் இந்த ராசிகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம், தொட்டது துலங்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ