கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது என கூறப்படுகிறது. எனினும் இந்த வைரஸின் பூர்விகத்தை தேடுவதற்கான நேரம் இது இல்லை என அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என பலர் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் பல்வேறு வகையான விஷயங்களைச் சொல்கிறார்கள், குறிப்பாக வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.


கொரோனா போன்று பல வைரஸ்கள் இதற்கு முன் தோன்றி பெரும் அச்சத்தை உண்டாக்கியும் உள்ளன., இந்த வைரஸ் வெளவால்கள் போன்ற அரிய விலங்குகளின் இறைச்சியால் மட்டுமே உலகம் முழுவதும் பரவுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் காட்டு விலங்கு இறைச்சி கடைகள் மூலமும் வைரஸ் பரவுவதாக தெரிவிக்கின்றனர், தற்போது உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கொரோனாவும் சீனாவின் ஒரு இறைச்சி கடையில் இருந்து தான் பரவத்தொடங்கியது என தெரிவிக்கின்றனர்.


என்றபோதிலும் உலகில் சுமார் பத்து நாடுகள் தற்போது தங்களது காட்டு விலங்கு இறைச்சி சந்தைகளை கண்மூடித்தனமாக இயக்கி வருகிறது. அதாவது., சீனாவுடன், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா, தைவான், ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் சந்தைகள் இப்போதும் செயல்பாட்டில் தான் உள்ளன. 


UN அறிக்கையின்படி, இந்த காட்டு விலங்கு இறைச்சி சந்தைகளின் ஆண்டு வருவாய் 2016-ல் ரூ.1.4 லட்சம் கோடியாக இருந்தது, இது 2018-ல் ரூ.7 லட்சம் கோடியை எட்டியது.


சீனாவைப் பற்றி பேசுகையில், சீனாவின் குவாங்டாங் சந்தை என்பது மலைப்பாம்புகள், ஆமைகள், பச்சோந்திகள், எலிகள், சிறுத்தைகள், வெளவால்கள், பாங்கோலின், நரிகள், காட்டு பூனைகள், முதலைகள் போன்ற விலங்குகள் விற்கப்படும் இடமாகும். சீனாவில் இந்த சந்தையிலிருந்து தான் 2002-ல் SARS வைரஸ் பரவியது. இந்த SARS காரணமாக, 26 நாடுகளைச் சேர்ந்த 8,000 பேர் பாதிக்கப்பட்டனர்.


தற்போது உலகை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸின் முதல் தாக்குதலும் இங்கு தான் துவங்கியுள்ளது. இதன் பின்னர், சீனா இந்த சந்தையை சில நாட்களுக்கு மூடியது, ஆனால் சில நாட்களுக்குப் இந்த சந்தை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.