வருகிறது சசிகுமார்-ன் சுந்தரபாண்டியன்- 2!!
2012-ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த படம் சுந்தரபாண்டியன். இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.
2012-ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த படம் சுந்தரபாண்டியன். இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.
தற்போது சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது.
சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணி நாடோடிகள் 2 படப்பிடிப்பை மதுரையில் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் முடிவடைந்ததும் சுந்தரபாண்டியன்-2 படமாக்கப்படவுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வேறு நாயகியை தேடி வருகின்றனர்.