கேரள மாநிலத்தில் பிறந்த ஆதிசங்கரர் ஜகத்குரு என்று அழைக்கப்படுகிறார். இன்று சங்கர ஜெயந்தி. ஆதிசங்கரர் உலகில் அவதரித்த தினம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகுரு-ஆர்யாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, எட்டு வயதிலே சந்நியாசம் ஏற்ற பால சந்நியாசி ஆதிசங்கரர்.


மத்தியப்பிரதேச மாநிலம் ஒங்காரேஸ்வரத்தில் சந்நியாசம் பெற்று, காசிக்கு சென்று கல்வி மற்றும் வித்தைகளை இளம் வயதிலேயே கற்று கரை தேர்ந்த பாலஞானி ஆதிசங்கரர்.


Also Read | தமிழ் பஞ்சாங்கம் 16 மே, 2021: இன்றைய நல்ல நேரம், சுப ஹோரைகள்


கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய சங்கரரை யாராலும் வாதத்தில் வெல்ல முடியாது என்று சிறப்பு பெற்றார். 
பத்ரிநாத்தில் (Badrinath), பத்ரி நாராயண ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்வித்தவரும் ஆதிசங்கரரே.


இந்திய துணைக்கண்டம் முழுவதும் பலமுறை யாத்திரை செய்து, கடைசியாக தமிழகத்தின் காஞ்சீபுரத்திற்கு வந்து   அங்கே சர்வக்ஞபீடம் ஏறி காமகோடி பீடத்தின் (Kamakodi Peetha) வ(ரிசையைத் தொடங்கி வைத்தார் ஆதிசங்கரர். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.


இந்தியா முழுவதும் பயணித்து தென்னிந்தியாவில் சாரதா பீடம், சிருங்கேரி (Sringeri), மேற்கில் துவாரகா பீடம், துவாரகை (Dwarka), வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவியவர் ஆதிசங்கரர்.


Also Read | இன்றைய ராசிபலன், 17 மே 2021: எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்


அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் நிலவிய மதமாச்சரியங்களை போக்க அரும்பாடு பட்ட்வர் ஆதிஷங்கரர்.
ஆறு வகை வழிபாட்டு மூர்த்தியை ஏற்பாடு செய்த சங்கரர், பிரம்ம தத்துவம் ஒன்றுதான் நிலையானது, மற்றதெல்லாம் உலகிலே மாறக்கூடியது என்ற அத்வைத தத்துவத்தை (Advaita philosophy) உபதேசம் செய்தார்.


இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர் ஆதிசங்கரர்.


விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற பக்தி நூல்களுக்கும் விளக்கவுரை எழுதியவர் ஆதிசங்கரர்.. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் உட்பட பல பக்தி பாடல்களை இயற்றி இந்து மதத்திற்கு பெரும் தொண்டாற்றியுள்ளார் ஆதிசங்கரர்.


Also Read | ஸ்ரீசடாரி எனும் நம்மாழ்வார் மூலம் ஆலயங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் விஷ்ணு


தமது 32ஆம் வயதில் கேதார்நாத்தில் (Kedarnath) சமாதி அடைந்த சங்கரர் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார். கேதார்நாத் கோயில் வளாகத்தின் பின்புறமாக ஆதிசங்கரின் நினைவிடம் அமைந்துள்ளது.


32 ஆண்டுகள் மட்டுமே இந்த உலகில் வாழ்ந்து, பல தசாப்தங்களில் செய்து முடிக்கக்கூடிய பல்வேறு அரும்பணிகளை நிறைவேற்றியவர் ஆதிசங்கரர் மட்டுமே.


ஆதிசங்கரரின் ஜெயந்தி ஆண்டு தோறும் வைசாக சித்த பஞ்சமியன்று   கொண்டாடப்படுகிறது.  


ALSO READ | Watch: இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் தகர்ந்த அல்ஜசீரா, பிற ஊடகங்களின் 12 மாடி கட்டிடம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR