ஆப்பிரிக்காவில், இருசக்கர வாகனங்களில் பெண்கள் அமர்ந்து பயணிக்க புதிய ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவர வேண்டும் என பாசியா வார்டு பிரதிநிதி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் ஒருவகை இரு சக்கர வாகன் 'பொடா பொடா'. இந்த வகை இருசக்கர வாகனங்களில் இளம்பெண்கள் அமருவதற்கு புதிய ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவர வேண்டும் என பாசியா பகுதியை சேர்ந்த பீட்டர் இம்மோவுடக் வலியுறுத்தியுள்ளார்.


பாசியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்கள், பெண்கள் மாரத்தான் போட்டிகளை துவங்கி வைத்து பேசிய பீட்டர் இம்மோவுடக், இருசக்கர பயணத்திற்கான புதிய சட்டதிருத்தம் குறித்து பேசியுள்ளார்.


நாட்டில் நடைப்பெறும் ஒழக்ககேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புதிய சட்டதிருத்தம் அமையும் என தான் நம்புவதாகவும் பீட்டர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பேசிய அவர்,.. "18 வயதிற்கு குறைந்த பெண்கள் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதை நாம் முக்கியமான ஒன்றாக கருத வேண்டும். இருசக்கர வாகனத்தின் இரு புறங்களிலும் கால்களைவிட்டு பெண்கள் பயணிப்பது ஒழுக்ககேடான செயல், இதன் காரணமாக தான் நாட்டில் அதிக அளவிளான பெண்கள் திருமணத்திற்கு முன்பு கருவுறுகின்றனர்.


நமது பாரம்பரியத்தில் பெண்கள் பக்கவாட்டாக கால்களை கீழ் விட்டு உட்கார்ந்து பயணிப்பது தான் முறைமை, இந்த வழக்கத்தை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்" என தெரிவித்தார்.


மேலும் இளைஞர்களிடையே ஒழுக்கத்தை கொண்டுவரும் வகையில் சில சட்டதிருத்தங்களை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.


ஆப்பிரிக்காவில்., பால்வினை நோய் மற்றும் சிறுவயது கருத்தரித்தல் போன்ற சம்பவங்கள் அதிகம் நிலவும் மாகாணங்களில் பாசியா முதல் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்து அந்நாட்டு அரசு பல நடைமுறைகளை கட்டாயமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.