புதுடில்லி: மகிழ்ச்சிக்கும், குதூகலத்திற்கும் மனம் தான் காரணம், வயது ஒரு தடையல்ல என்பதை நிரூப்பித்திருக்கிறார் 83 வயது முன்னாள் முதலமைச்சர் ஃபாருக் அப்துல்லா. சண்டிகரில் பஞ்சாப் முதலமைச்சரின் பேத்தி (செஹரிந்தர் கவுர்) திருமண விழாவில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா, டான்ஸ் ஆடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோவில், முன்னாள் முதல்வர் பிரபலமான பாடல்களான ‘ஆஜ் கல் தேரே மேரே பியார்’ மற்றும் ‘குலாபி ஆன்கேன் ஜோ தேரி தேகி’ ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார். இந்த பாடல்கள் இரண்டுமே பிரபல திரைப்பட பாடலாசிரியர் முகமது ரபியின் கைவண்ணத்தில் உருவானவை.  


குறிப்பிடத்தக்க வகையில், ஒரு நல்லுறவைப் பகிர்ந்து கொள்ளும் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் பாரூக் அப்துல்லா ஆகியோர் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருப்பதும் இந்த வீடியோவில் தெரிகிறது.


Also Read | Disrespecting Culture: சப்தபதி சடங்குடன் செய்த திருமணம் ‘கலாச்சார அவமதிப்பு?’ குமுறும் நெட்டிசன்கள்!


"கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் ஃபாரூக் அப்துல்லாவின் இந்த வீடியோ வயது உண்மையில் ஒரு எண் என்பதை நிரூபிக்கிறது!" என்ற கேப்ஷனுடன் காங்கிரஸ் தலைவர் சரல் படேல் ட்வீட் செய்துள்ளார்.


வீடியோவுக்கு நெட்டிசன்கள் எவ்வாறு பதிலளித்தார்கள் தெரியுமா? 



கேப்டன் அமரீந்தர் சிங்கின் பேத்தியின் திருமணத்தில் ஃபாரூக் அப்துல்லா நடனம் ஆடுகிறார். இவரது ஆற்றல் போற்றத்தக்கது. இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள், 83 வயது எதுவுமே மகிழ்ச்சிக்கு தடை இல்லை, வயது என்பது வெறும் எண் தான்”என்று ஒரு ட்விட்டர் பயனர் கூறினார்.


இந்த வயதில் பாலிவுட் மெலடிகளில் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் பாரூக் அப்துல்லா நடனமாடும் வீடியோ வாழ்க்கை வசந்தமாக்குவதாக மற்றொரு பயனர் கூறினார்.


Also Read | ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி.. 4000 ரயில் நிலையங்களில் இலவச WiFi சேவை!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR