ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றம்: தினமும் கூடுதல் டேட்டா
தனது திட்டத்தை மாற்றி அமைத்து வாடிக்கையாளர்களுக்கு சலுகை அறிவித்த ஏர்டெல் நிறுவனம்.
சமீபகாலமாக தொலை தொடர்பு நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது Airtel நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஏர்டெல் 448 ரூபாய்க்கு ப்ரீபெயிட் திட்டம் வழங்கி வருகிறது. தற்போது அந்த திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. டேட்டா 1 ஜிபி வீதம் 82 நாட்களுக்கு கிடைத்தது. தற்போது அதே 82 நாட்களுக்கு 1.5GB என டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல் புதிய திட்டத்தின் சிறப்பு:-
விலை: ரூ.448
டேட்டா: தினமும் 1.5 ஜிபி
நாட்கள்: 82
அழைப்பு: வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் இலவசம்
எஸ்எம்எஸ்: தினமும் 100 SMS
மேலும் இந்த திட்டத்தை பயன்படுத்துபவர்களுக்கு ஏர்டெல் ஆன்லைன் செயலி ஆனா ஏர்டெல் டிவி, வின்க் மியூசிக் உட்பட செயலிகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் அணுகலாம்.
இந்த திட்டத்துடன் ஒப்பிடுகையில், வோடபோன் ரூ 458 ஒரு திட்டத்தை வழங்குகிறது. அதில் 4ஜி/3ஜி தரவு என தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்தியாவில் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இது 84 நாட்களுக்கு ஒரு செல்லுபடியாகும்.