இளைஞர்கள் கவனத்திற்கு... சம்பளத்தை அளித்தரும் சைபர் பாதுகாப்பு வேலை!
Cyber Security Jobs: சைபர் தாக்குதல்கள் அதிகமாகி வரும் நிலையில், இணைய பாதுகாப்பு நிபுணர்களுக்கான தேவை அதிகமாகியுள்ளது. இணைய பாதுகாப்பு துறை சார்ந்த தகவல்களையும், அதில் உள்ள வேலைவாய்ப்புகளையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
Cyber Security Jobs: தற்போதைய தகவல் தொடர்பு காலத்தில், இணைய பாதுகாப்பு நிபுணர்களின் தேவை என்பது நம் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, இத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், தொழில் வல்லுநர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு அறிக்கையின்படி, மே மாதம் வரை இந்தத் துறையில் 40,000 வேலைவாய்ப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தத் துறையில் 5-8 ஆண்டுகள் அனுபவம் உள்ள வல்லுநர்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் பேக்கேஜ் சலுகையைப் பெறுகிறார்கள்.
2023ஆம் ஆண்டு மே மாதத்தில், இணைய பாதுகாப்பில் சுமார் 40 ஆயிரம் திறந்த வேலை வாய்ப்புகள் இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இது இந்தியாவில் திறமையான சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. இருப்பினும், தேவை-வழங்கல் இடைவெளி 30% ஆக இருகிறது என்றும் கூறப்படுகிறது. இது தொழில்துறையில் ஒரு பெரிய திறன் சவாலாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மே 2023க்குள் 40,000 வேலைகள் கிடைத்துள்ளதாகவும், ஆனால் திறன் இடைவெளி அப்படியே இருப்பதாக அத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பணியாளர்களை மேம்படுத்தி தகுதியான நிபுணர்களை பணியமர்த்துவது அவசர தேவையாக உள்ளது. ஒரு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி, இணையப் பாதுகாப்பு சந்தைப் பங்கு வேகமாக வளர்ந்து வருகிறது. 2027ஆம் ஆண்டளவில் 3.5 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்ட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 8.05 சதவீதமாகும்.
மேலும் படிக்க | Form 16 இல்லையா? நோ டென்ஷன்.. நீங்களும் ITR தாக்கல் செய்யலாம்.. இதோ செயல்முறை
உலகளவில், வாராந்திர சைபர் தாக்குதல்கள் வாரத்திற்கு 1,200 தாக்குதல்களைத் தாண்டியுள்ளது. இது 7% அதிகமாகும். அதே நேரத்தில் இந்திய நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2,000 வாராந்திர தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. பெரும்பாலான சைபர் தாக்குதல்கள் சுகாதார சேவை துறையில் தான் நடக்கிறது.
வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களை திறம்பட சமாளிக்க இணைய பாதுகாப்பு திறன்களுடன் பணியாளர்களை நவீனமயமாக்க வேண்டிய அவசியம் உள்ளது. தரவு தனியுரிமை, கிளவுட் பாதுகாப்பு, AI பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு போன்ற பகுதிகளில் நிபுணர்களுக்கு அதிக தேவை உள்ளது. சிக்கலைத் தீர்ப்பது, தகவல் தொடர்பு, குழுப்பணி மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பிற திறன்களும் இந்தத் துறையில் அவசியமாகிறது
0-3 வருட அடிப்படை சம்பளத்துடன் IT ஆடிட்டர், தகவல் பாதுகாப்பு ஆய்வாளர், நெட்வொர்க் அல்லது IT பாதுகாப்பு பொறியாளர் அல்லது நிபுணர், பாதுகாப்பு சோதனை அல்லது ஊடுருவல் சோதனையாளர் மற்றும் கணினி தடயவியல் ஆய்வாளர் ஆகியோர் ஆராய்ச்சி ஆய்வில் சைபர் பாதுகாப்புத் துறைக்கு அடையாளம் காணப்பட்ட முக்கிய பணிப் பாத்திரங்களாகும். அனுபவமில்லாதவர்களுக்கு 3 முதல் 6 லட்சம் வரையும், அதேசமயம் 5-8 ஆண்டுகள் அனுபவம் உள்ள நிபுணர்களுக்கு 15 முதல் 20 லட்ச ரூபாய் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ