புதுடெல்லி: பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மார்ச் 31 கடைசி நாளாகும். நீங்கள் இதுவரை உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்துவிடுங்கள். பான்-ஆதாரை ஒன்றோடொன்று இணைப்பது கட்டாயமாகும். இல்லையெனில், நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்த இணைப்பு குறித்து மிகவும் கண்டிப்பாக உள்ளது. இது மட்டுமின்றி, செல்லாத பான் எண்ணை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கவும் விதிமுறை உள்ளது. முதலில், பான் இல்லாமல் செய்ய முடியாத முக்கியமான விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.


பான் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் என்ன ஆகும்? 


1. நீங்கள் உங்கள் பான்-ஆதாரை இணைக்கவில்லை என்றால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். அதே நேரத்தில் உங்கள் கேஒய்சியும் செல்லாமல் போகலாம். 


2. செல்லாத பான் எண்ணைப் பயன்படுத்துவது குற்றமாகும், அதற்கு உங்களுக்கு ஆயிரம் அல்லது அதற்கு மேலான அபராதம் விதிக்கப்படலாம்.


3. மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்யவும், பான் கட்டாயமாகும். PAN செல்லாமல் போனால்,  SIP மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ நீங்கள் மியூசுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்ய முடியாது.


மேலும் படிக்க | நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை 


4. நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்க அல்லது 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய / எடுக்க முயற்சித்தால், அங்கேயும் பான் அவசியம்.


5. 5 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால், வாங்கும்போது பான் கார்டு விவரங்களைக் கொடுக்க வேண்டும். எனவே, பான் கார்ட் செல்லாமல் போனால், நகைகள் வாங்குவதிலும் சிக்கல் வரக்கூடும். 


6. ரூ.5 லட்சத்துக்கு மேல் வாகனம் வாங்கும்போது பான் கார்டு விவரங்களைக் கொடுக்க வேண்டும். நீங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உங்களால் ஒரு கார் கூட வாங்க முடியாது.


எங்கெல்லாம் பான் தேவை?


இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பான் கார்டு இல்லாமல் எந்த முக்கிய வேலையையும் செய்ய முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மியூசுவல் ஃபண்டு அல்லது பங்குகளில் முதலீடு செய்வதற்கும், 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்வதற்கும் பான் அட்டை அவசியமாகும். நீங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்துவிட்டால், செயலில் இல்லாத பான் கார்டுகள் செயல்படத் தொடங்கிவிடும். இந்த இணைப்பை SMS மூலம் செய்யலாம்.


மெசேஜ் மூலம் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி?


பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வரி செலுத்துவோர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். அதன் வடிவம் UIDPAN<space> <12 இலக்க ஆதார் அட்டை><space><10 இலக்க PAN> என இருக்க வேண்டும். பின்னர் அதை 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.


மேலும் படிக்க | SBI Alert: இதை மட்டும் செய்யாதீர்கள், கணக்கில் உள்ள பணம் காலியாகிவிடும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR