புதுடெல்லி: COVID வழிகாட்டுதல்களுடன் அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 1 முதல் தொடங்குகிறது. ஜூன் 28 அன்று புனித யாத்திரைக்கான பயணம் தொடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமர்நாத் யாத்திரை 2021: அமர்நாத் புனிதப்பயணத்தை நிர்வகிக்கும் வாரியம் புனிதப் பயணம் தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள 3,880 மீட்டர் உயரமுள்ள இமயமலை குகை ஆலயத்திற்கு புனித யாத்திரைக்கான பதிவு செயல்முறை ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும்.


37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரவியிருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு-காஷ்மீர் வங்கி மற்றும் யெஸ் வங்கியின் குறிப்பிட்ட 446   கிளைகள் மூலம் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கும். 


சனிக்கிழமையன்று நடைபெற்ற ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் (Shri Amarnath Shrine Board (SASB) இந்த ஆண்டுக்கன 56 நாள் அமர்நாத் யாத்திரையை ஜூன் 28 அன்று தொடங்க முடிவு செய்தது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரக்ஷா பந்தன் திருவிழா நாளில், பாரம்பரிய வழக்கத்தின் படி புனித யாத்திரை முடிவடையும். 


Also Read | ஒன்றரை கோடி மக்களுக்கு வாகன ஓட்டும் பயிற்சி அளித்து சாதனை செய்த Driving School  


ராஜ் பவனில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ அமர்நாத் சன்னதி வாரியத்தின் (Shri Amarnath Shrine Board (SASB)) 40 வது வாரியக் கூட்டத்தின் போது இந்த பயணத்தை தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. 


கொரோனா வைரஸ் தொற்றுநோயால், கடந்த ஆண்டிற்கான யாத்திரை சாதுக்களின் ஒரு குழுவிற்கு மட்டுமே என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டது, 2019 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 2 அன்று "பயங்கரவாத அச்சுறுத்தல்" காரணமாக புனிதப் பயணம் திடீரென்று இடை நிறுத்தப்பட்டது. மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி, 370 சட்டப்பிரிவை அகற்றிய சில நாட்களில் யாத்திரை இடை நிறுத்தப்பட்டது. 


2019 ஆம் ஆண்டில் 3.42 லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இந்துக்களின் புனித குகை ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர், இயற்கையாக உருவாகும் பனி-சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆவலாக இருக்கின்றனர். 2015 ஆம் ஆண்டில் 3.52 லட்சம் யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசித்தனர். இந்த எண்ணிக்கை 2017 ல் 2.60 லட்சமாகவும், 2018 ல் 2.85 லட்சமாகவும் இருந்தது.


Also Read | COVID-19: கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது தமிழகம்


அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு யாத்திரை இரு பாதைகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கலாம் என்று வாரியம் முடிவு செய்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தில் பாரம்பரியமாக 46 கி.மீ. தொலைவுள்ள பஹல்காம் பாதையும், காண்டர்பால் மாவட்டத்தில் 12 கி.மீ தொலைவு கொண்ட இரு பாதைகள் வழியாக பக்தர்கள் அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசிக்கின்றனர். இந்த புனிதப் பயணம், இந்துக்களின் புனித நாளான ஆனி மாத சதுர்தசியன்று தொடங்கும்.


“இந்த ஆண்டு யாத்திரை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 SOP களின் படி நடைபெறும். 13 வயதுக்குக் குறைவான மற்றும் 75 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று ஒரு அதிகாரி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


Also Read | Mithali Raj 10,000 சர்வதேச ரன்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR