WOW….TV பார்ப்பவர்களுக்கு Good News! உங்களைத் தேடி வருகின்றன amazing offers!!
இந்த பண்டிகைக் காலங்களில் டைரக்ட் டு ஹோம் (D2H) சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளன.
இந்த பண்டிகை காலங்களில் TV பார்ப்பவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைத்துள்ளன. டைரக்ட் டு ஹோம் (D2H) சேவை வழங்கும் நிறுவனங்கள் (DTH Service Provider) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய நேரடி (DTH) ஆபரேட்டர்களில் ஒருவரான டிஷ் டிவி (Dish TV) தனது D2H வாடிக்கையாளர்களுக்கு ரூ .99 க்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தை (Extended Warranty Sheme) அறிமுகப்படுத்தியுள்ளது. நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தில் செட்-டாப் பாக்சும் (STB) அடங்கும், இது ஜி.எஸ்.டி.-யுடன் கவர் ஆகும்.
Dish TV-யின் offer என்ன?
இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் 99 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது Set Top Box-ல் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கிடைக்கிறது. நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்திற்கு பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் DTH ஆபரேட்டரின் வலைத்தளத்தைப் பார்வையிடலாம். நீங்கள் Offer Page-ஐக் கண்டறிந்து, பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர் ID-ஐ உள்ளிட்டு தொகையை செலுத்தலாம்.
Tata Sky-ன் Offer என்ன?
மற்றொரு DTH நிறுவனமான Tata Sky, அதன் பயனர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக டிவி பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. Tata Sky பயனர்கள் தங்கள் ICICI வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை 6 அல்லது 12 மாதங்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். நிறுவனத்தின் சார்பாக பயனர்களுக்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!
Tata Sky வழங்கும் இந்த சலுகையைப் பயன்படுத்த, பயனர்கள் அக்டோபர் 31 க்குள் தங்கள் டிவி-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். 12 மாத சந்தா எடுத்த பிறகு, பயனர்கள் 2 மாத ரீசார்ஜ் கேஷ்பேக் பெறுவார்கள். 6 மாத சந்தாவை எடுத்த பிறகு, பயனர்கள் ஒரு மாத ரீசார்ஜ் கேஷ்பேக்காக பெறுவார்கள்.
கேஷ்பேக் 7 நாட்களில் கிடைக்கும்
DTH நிறுவனமான Tata Sky வழங்கும் இந்த சலுகை அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும். இந்த சலுகையின் நன்மை நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியிலிருந்து ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும். Tata Sky-ன் படி, பயனர்கள் இரண்டு மாத கேஷ்பேக் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், கேஷ்பேக் தொகை 7 நாட்களுக்குள் பயனரின் கணக்கில் திருப்பித் தரப்படும். எனவே முதல் மாதத்தின் கேஷ்பேக் தொகை 48 மணி நேரத்திற்குள் பயனர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இரண்டாவது மாதத்திற்கான கேஷ்பேக் தொகை 7 நாட்களில் வரவு வைக்கப்படும்.
பாங்க் ஆப் பரோடாவின் கிரெடிட் கார்டிலும் சலுகைகள் கிடைக்கின்றன
Tata Sky-யின் கேஷ்பேக் சலுகை, பாங்க் ஆப் பரோடாவின் கிரெடிட் கார்டிலும் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 30 ஆம் தேதி வரை பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) கார்டில் செல்லுபடியாகும். Tata Sky கணக்கை ஆக்டிவேட் செய்த நாளில் செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு இந்த சலுகை இல்லை. சலுகை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு நிறுவனத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR