பெங்களூரு: இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் இந்தியப் பிரிவான அமேசான் இந்தியா, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவியாருக்கும் நாடு முழுவதும் உள்ள அவர்களின் மையங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்னாள் படைவீரர்களின் வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை ஆர்மி வெல்ஃபேர் பிளேஸ்மென்ட் ஆர்கனைசேஷன் (Army Welfare Placement Organisation) உடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அமேசான் இந்தியா திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது, இந்தியப் பிரிவான அமேசான் நாடு முழுவதும் 200 விநியோக மையங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் பூர்த்தி மற்றும் விநியோக மையங்கள் எத்தனை உள்ளன என்று நிறுவனம் கூறவில்லை. அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனத்தின் விதிகள் காரணமாக, இந்தியாவில் அதன் மையங்களில் எத்தனை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்பதை அவர்களால் வெளியிட முடியாது எனக் கூறினார்.


மேலும் "மையங்களில் பணியாளர்கள், பெரும்பாலும் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள், சிறப்பு விற்பனையில் தள்ளுபடிகள் வழங்கப்படும் போது திருவிழாக்கள் அல்லது சிறந்த விற்பனையான சந்தர்ப்பங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள்" என்று செய்தித் தொடர்பாளர் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார். 


"இந்த புதிய திட்டத்தின் கீழ், கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை மதிக்கும் இராணுவ குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கின்றன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது பணிபுரியும் முன்னாள் படைவீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் நிறுவனம் உறுதியாக இருப்பதாகவும், பல்வேறு நபர்களுக்கு அவர்களின் திறமைகளை உணர வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.