'பாகுபலி' படத்துக்குப் பிறகு அனுஷ்கா 'பாகமதி' என்னும் படத்தில் நடித்து வந்தார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனுஷ்காவின் பிறந்தநாளில் வெளியானது. 'பாகமதி' படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் த்ரில்லர் படமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுஷ்காவுடன் ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக மதி ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் அசோக் இயக்கியுள்ளார். தெலுங்கில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் வெளியிடுகிறது.


இதன் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரொமோஷ்னல் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளது படக்குழு. இந்த ப்ரொமோஷ்னல் வீடியோ டிவிட்டரில் டிரென்ட் ஆகி வருகிறது.