கூகுளில் இந்த விஷயங்கள் எல்லாம் ட்ரை பண்ணி இருக்கீங்களா?
கூகுளை முதன்முதலாக பயன்படுத்தும் நபராக இருந்தாலும் கூட இந்த எளிய அடிப்படையான விஷயங்களை மிக விரைவில் கற்றுக்கொள்ளமுடியும்.
பலரும் பல்வேறு விதமான தகவல்களை பற்றி அறிந்துகொள்ள கூகுளையே அதிகம் நாடுகின்றனர். கல்வி சம்மந்தமான விபரங்கள் தொடங்கி பொழுதுபோக்கு, வணிகம், அரசியல் உட்பட பல முக்கியமான தகவல்களை நம்மால் கூகுளில் பெற முடிகிறது. கூகுள் தேடலில் சில அடிப்படையான விஷயங்கள் உள்ளன. டைம் ஃபில்டர்: கூகிள் தேடல் முடிவுகளின் மேல் இடதுபுறத்தில், (அனைத்தும், செய்திகள், ஷாப்பிங், படங்கள் ) போன்ற டைம் ஃபில்டர்கள் இருக்கும். இந்த ஆப்ஷன்கள் Default 'எந்த நேரத்திலும்' என்று அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் கடந்த ஒரு மணிநேரம், வாரம், மாதம் அல்லது வருடம் போன்றவற்றின் தேடல் முடிவுகளைப் பெற தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | இனி வாய்ஸ் மூலம் கூகுள் பேவில் பேமண்ட் செய்யலாம்!
மேற்கோள் குறிகளைப் (“ ”) பயன்படுத்துதல்: கூகிளில் நீங்கள் எந்தவிதமான தேடல்களின் முடிவுகளையும் பெறலாம். நீங்கள் குறிப்பிட்ட ஒன்றை தேடும்போது அது சம்ம்மந்தப்பட்ட பல தகவல்களை கூகிள் உங்களுக்கு காண்பிக்கும். இருப்பினும் உங்களுக்கு வேண்டிய சரியான தகவலை மட்டும் நீங்கள் தெளிவாக பெற விரும்பினால் நீங்கள் தேடும் குறிப்பிட்ட சொற்களுடன் இரட்டை மேற்கோள் குறிகளைப் (“ ”) பயன்படுத்தலாம். குறிப்பிட்ட வலைதள பக்கங்களை தேட: ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தின் பக்கங்களைத் தேட கூகிள் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் தளங்களை பற்றிய முழு தகவல்களை பெற உங்கள் தேடலில் 'site:xyz.com' என்று முன்னும் பின்னும் மேற்குறிகளை சேர்க்கலாம்.
கால்குலேட்டர் மற்றும் நாணய மதிப்பை தேட: கூகிள் விரைவாக கணக்கீடுகளை செய்ய பயனாளர்களுக்கு உதவுகிறது. பதில்களை விரைவாகப் பெற, 82ஐ 3 ஆல் வகுத்தல் அல்லது 56 பெருக்கல் 7 என்று உள்ளிட்டு தேடலாம். அதேபோல இதில் நாணய மதிப்பு குறித்த தகவல்களையும் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். விரைவாக பெற நீங்கள் $80 ஐ INR இல் தேடலாம். தனிமவரிசை அட்டவணை: கூகுளில் தனிமவரிசை அட்டவணை புதுப்பிக்கப்பட்டு கார உலோகங்கள், அல்கலைன் பூமி உலோகங்கள், டிரான்சிஷன் உலோகங்கள், எதிர்வினை அல்லாத உலோகங்கள், லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் போன்ற வகைகளுக்கு ஏற்ப வண்ணக் குறியீடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்கள் குறித்த தேடல்: திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சியின் பெயரைத் தொடர்ந்து 'வாட்ச்' என்பதைத் தேடுவதன் மூலம் ஸ்ட்ரீம் செய்யப்படும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான பட்டியல்களைக் காணலாம்.
மேலும் படிக்க | கூகுளில் ரகசிய தேடல்களை நீக்குவது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR