250 மில்லியன் செல்போன்கள் இனி ஸ்விட்ச் ஆப் ஆகி விடும், ஏர்டெல், ஐடியா, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் அன்மையில் டெலிகாம் நிறுவனங்கள் குறைந்த விலையில் பல்வேறு புதிய சலுகைகளையும் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் தக்கவைக்க பல்வேறு உத்திகளை மேற்கொண்டு கருகிறது.  


இந்நிலையில் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜே செய்யாத 250 மில்லியன் வாடிக்கையாளர்களை அதிரடியாக நீக்க திட்டமிட்டுள்ளன. இருந்தபோதிலும் ஜியோ, BSNL போன்ற நிறுவனங்கள் எப்போதும் தனது மற்றும் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை கவரும் புதிய சலுகைகளை அறிவத்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இன்னும் சில வாரங்களில் 250 மில்லியன் வாடிக்கையாளர்களின் 2G செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


2G செல்போனில் ப்ரீபைடு வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு 35 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்வோரின் செல்பேசி எண் வருங்காலத்தில் செயலிழந்துவிடும். ஏர்டெல்லுக்கு 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடோபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 15 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.


மாதத்திற்கு 35 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளருக்கான சேவையை நிறுத்திக் கொள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக முடிவெடுத்துள்ளன. இரண்டு சிம்கார்டுகளுடன் கூடிய செல்போன்களை வைத்திருப்போர், தங்களிடம் உள்ள 2ஜி எண்ணுக்கு ரீசார்ஜ் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.