சாலையில் உள்ள பள்ளத்தை அடைக்க ஆண்குறியை பயன்படுத்திய மர்மநபர்கள்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் அன்றாடம் காலையில் வேலைக்கு அவசரம் அவரசரமாக செல்லும் போது நம்மை பல்வேறு விஷயங்கள் பொறுமையை இழக்க செய்வது உண்டு. அதில், ஒன்றுதான் குண்டும் குழியுமாக இருக்கும் நமது பகுதி சாலை. அது நாம் அனைவருக்கு நன்றாக தெரிந்த ஓன்று. சாலையை சரி செய்ய கோரி நாம் எத்தனை மனு அளித்தாலும், அப்பகுதியில் எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதும் இல்லை, செவி சாய்ப்பதும் இல்லை. நாமும் இந்த சாலை குறித்து யாரிடம் கூறினால் இதற்கான தீர்வு கிடைக்கும் என பல்வேறு கோணங்களில் யோசிப்பதும் உண்டு. 


இந்நிலையில்,  குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஆண்குறியை  வரைந்து வைத்தால் அந்த சாலையை உடனே அரசாங்கம் சரி செய்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு இங்கிலாந்தில் ஒரு பகுதியில் உள்ள சாலையில் பல நாட்களாக விபத்து ஏற்படுத்தும் வகையில் பல குழிகள் இருந்துள்ளது. இது குறித்து பலர் புகார் செய்தும் அந்த சாலையை சரிசெய்யப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் ஒரு நாள் மர்மநபர் சாலையில் ஏற்பட்டிருந்த அந்த குழியை சுற்றி ஆண்குறி போன்ற படம் வரைந்துவிட்டு சென்றுவிட்டனர். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதையடுத்து அரசு நிர்வாகம் அந்த பகுதியில் இருந்த பள்ளத்தை சரிசெய்து, சாலையை சீரமைத்துள்ளனர். இதையடுத்து அதை ஒரு சமூகவலைதள பக்கம் இந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளது.