புதுடெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண விசாரணையில் ஒரு முக்கிய திருப்புமுனையை புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) வெளியிட்ட அறிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. சுஷாந்தின் மரணம் கொலையல்ல, தற்கொலை என்று எய்ம்ஸ் தெரிவித்திருக்கிறது. அவரது மரணத்தில் சதி என்று கூறிய கூற்றுகளை நிராகரித்த எய்ம்ஸ், “conclusive medico-legal” என்பதன் அடிப்படையில் சுஷாந்த் தற்கொலை செய்துக் கொண்டது உண்மை என்று சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு தரப்பினருக்கு எய்ம்ஸின் இந்த முடிவில் திருப்தி ஏற்படவில்லை என்றாலும், மற்றொரு தரப்பினர் நடிகை கங்கனா ரனவுத்தின் வாக்குறுதியை நினைவுபடுத்துகிறது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து அவர் கூறிய கூற்றுக்களை நியாயப்படுத்த முடியாவிட்டால் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பித் தருவதாக நடிகை கங்கனா ரனாவுத் தெரிவித்திருந்தார்.


“… நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் தவறாக எதையும் சொல்லியிருந்தாலோ, என்னால் நிரூபிக்க முடியவில்லை என்றாலோ நான் பொது வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவேன், எனது பத்மஸ்ரீ விருதைத் திருப்பித் தருவேன்” என்று கங்கனா Republic TV தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்.



அது மட்டுமல்ல, பல பாலிவுட் பிரபலங்கள், வாரிசு முறையை ஊக்குவிப்பதாகவும், பிறரை ஒதுக்கி துன்புறுத்துவதாகவும், கங்கனா சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.


கங்கனாவின் பழைய சத்தியங்களை நினைவுபடுத்தும் ட்விட்டர் பயனர்கள், பத்மஸ்ரீ விருதை எப்போது திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டனர். இங்கே சில நெட்டிசன்களின் கலாய்ப்புக்கள்:





பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14 ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, தூக்குப்போட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், சுஷாந்தின் மரணத்தில் சதி, அரசியல் குழப்பம், போதைப்பொருள் என பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு, சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.


Read Also | Gir National Parkஇல் உதவிக் குரலுக்கு செவி சாய்த்த சிங்கம்: வைரலாகும் Video


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR