2023 ஜனவரியில் வங்கிகளுக்கு 14 விடுமுறை நாட்கள்... இன்றே திட்டமிட முழு விபரம் இதோ..!!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நாட்காட்டியின் படி, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வங்கிகளுக்கு 14 விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி சேவைகள் அனைத்தும், தற்போது அதிகளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள போதிலும், சில விஷயங்களுக்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. வீட்டுக் கடன், வாகன கடன், நகைக் கடன் போன்றவை தொடர்பாக வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படலாம். எனவே விடுமுறைகள் பற்றிய தகவல் இருந்தால் திட்டமிடுவது எளிது.
ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, அடுத்த மாதம் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகள், மற்றும் இதர விடுமுறை நாட்கள் என என மொத்தம் 14 வங்கி விடுமுறை நாட்கள் உள்ளன.
ஜனவரியில் புத்தாண்டு, குரு கோவிந்த் சிங் ஜெயந்தி, மிஷனரி தினம், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, மகர சங்கராந்தி, பொங்கல், குடியரசு தினம் போன்ற பல முக்கியமான பண்டிகைகள் நாட்டின் பல பகுதிகளில் மிக முக்கியமாக பெரிய அளவில் கொண்டாடப்பட உள்ளது. மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளை பொறுத்து, விடுமுறை வழங்கப்படும் நாள் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநிலத்திற்கு மாநிலம் விடுமுறை நாட்களும் வேறுபடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் - அதிரடி அறிவிப்பு
2023 ஜனவரி மாத விடுமுறை முழு விபரம்:
ஜனவரி 1 : புத்தாண்டு தினம் (அனைத்து மாநிலங்களிலும்) (ஞாயிறு)
ஜனவரி 5 : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
ஜனவரி 11 : மிஷனரி தினம் (மிசோரம் மட்டும்)
ஜனவரி 12 : சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
ஜனவரி 14 : மகரச் சங்கராந்தி (2ம் சனிக்கிழமை)
ஜனவரி 15 : பொங்கல்/மாக் பிஹு (ஞாயிறு)
ஜனவரி 22 : சோனம் லோசர் (சிக்கிம் மட்டும்) (ஞாயிறு)
ஜனவரி 23 : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி
ஜனவரி 25 : மாநில தினம் (ஹிமாச்சல பிரதேசம்)
ஜனவரி 26: குடியரசு தினம் (அனைத்து மாநிலங்களிலும்)
ஜனவரி 31 : மீ-டேம்-மீ-ஃபை (அஸ்ஸாம் மட்டும்)
மேலும் படிக்க | ’இதெல்லாம் பொய்யா?’ சிபில் ஸ்கோரை சுற்றியிருக்கும் கட்டுக்கதைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ