திருமண தடைகள் நீங்க பரிகாரம்: ஜோதிடத்தில் பரிகாரங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சில கிரகங்களின் சுப பலன்களைப் பெற, சில பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்வது உத்தமம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எவ்வளவோ முயற்சிகள் மற்றும் முயற்சிகளுக்குப் பிறகும் பல சமயங்களில் திருமணத்தில் தடைகள் வந்து கொண்டே இருக்கும். பெரிய காரணமின்றி திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். 


இந்நிலையில், சில எளிய பரிகாரங்கள் மூலம் திருமண தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில், மனதிற்கு ஏற்ற துணை கிடைக்க சில எளிய பரிகாரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 


திருமண தடைகள் நீங்க சங்கட ஹர சதுர்த்தி அன்று விக்னங்களை நீக்கும் விநாயகரை வழிபட்டு வர தடைகள் நீங்கி விரைவில் நாதஸ்வர ஒலியை விரைவில் கேட்கலாம். 


திருமண தடைகள் நீங்க விஷ்ணுவை வழிபடவும். விரைவில் திருமணம் ஆக வேண்டும் என விரும்புபவர்கள் வியாழன் அன்று விரதம் இருக்கலாம். மேலும், இந்த நாளில் வாழை மரத்தை வழிபடுவதும் பலன் தரும். இது தவிர மஞ்சள் பொருட்களை தானம் செய்வதும் நன்மை தரும். அதே சமயம், பசுவுக்கு மஞ்சள் கலந்த கோதுமை மாவுடன் வெல்லம் கொடுக்க வேண்டும். முடிந்தால் பகவான் விஷ்ணுவின் 108 நாமங்களை ஜபிக்கவும். இதனால் திருமண தடைகள் நீங்கும்.


மேலும் படிக்க | சகல விதமான சங்கடங்களையும் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்


சுந்தரகண்டம் பாராயணம் செய்வதும் திருமண தடைகளை நீக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சுந்தரகாண்டத்தை தொடர்ந்து பாராயணம் செய்வது நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை. 21 நாட்கள் தொடர்ந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதன் மூலம் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்குவதோடு பிற பிரச்சனைகள் விலகும். இதைப் பாராயணம் செய்யும் போது, ​​அனுமன் படத்தை முன் வைத்து வழிபடுவது நன்மை தரும். 


இதை தவிர சிவலிங்கத்திற்கு தவறாமல் அபிஷேகம் செய்வதும் பலன் அளிக்கும். சிவலிங்கத்தின் மீது தண்ணீர் அபிஷேகத்தை தவிர பசுவின் பச்சை பால் கொண்டு அபிஷேகம் செய்யலாம். சிவனுக்கு பிடித்த வில்வ இலைகளையும் அர்ப்பணிக்கலாம். இதனால், சிவபெருமான் உங்கள் மன ஆசைகளை நிறைவேற்றுவார். திருமணமாகாதவர்கள் 16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருக்கலாம். 


மேலும் படிக்க | திருமண கடன் வாங்க திட்டமா... இந்த செய்தி உங்களுக்குத்தான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR