ஜோதிட சாஸ்திரப்படி வெவ்வேறு ராசிகளில் பிறந்தவர்களின் குணம் வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் விருப்பு வெறுப்புகள் வேறுபடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு நபரின் ராசியின் அடிப்படையில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு செயல்படும் என்பதை நாம் அறியலாம். அதே நேரத்தில், அவரது நிதி நிலை, வெற்றி போன்றவற்றையும் இதன் மூலம் மதிப்பிடலாம். எனவே  இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக திமிர் பிடித்தவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசியினர் அதிக திமிர் பிடித்த குணம் கொண்டவர்கள்


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: ஜூன் 5 முதல் சனி இந்த ராசிக்காரங்களுக்கு இன்னல்களை தருவார் 


மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம். மற்றவர்களை பற்றி கவலைப்படுவது என்பது இவர்களுக்கு மிகவும் கசப்பான ஒன்றாகும். அவர்கள் மேல் அக்கறை இல்லை என்று அர்த்தமல்ல தன்னை பற்றி சிந்திக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை என்று அர்த்தம். அப்படியே மற்றவர்கள் மீது அக்கறை கொண்டாலும் அது அவர்களுக்கு வேண்டியவர்களாக மட்டுமே இருக்கும். மற்றவர்கள் மீது அக்கறை செலுத்த அவர்களுக்கு நேரமும் இருக்காது, விருப்பமும் இருக்காது.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் தான்தான் பெரியவர் என்றும் தன் நலன் மட்டுமே முக்கியம் என்றும் சிந்திக்கக்கூடியவர்கள். இவர்கள் தேவையில்லாத பாசாங்கு செய்வார்கள். இவர்களின் ஈகோ மிகவும் பெரியதாகும், இதனால் அவர்களின் வெற்றி பயணத்தில் நிறைய தடங்கல்கள் ஏற்படலாம். அதுமட்டுமில்லாமல், தங்களைப் பெரிதாகக் காட்டிக் கொள்வார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்கள் அனைத்திலும் சரியாகத்தான் முடிவெடுப்பார்கள் அது மற்றவர்களை பற்றிய கருத்துக்களாக இருந்தாலும் சரி.


விருச்சிகம் - இந்த ராசி மக்கள் இயற்கையால் மிகவும் திமிர்பிடித்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வசீகரம், நம்பிக்கை, விவேகம் என அனைத்தும் இவர்களிடம் இருந்தாலும் இவர்களின் சுயநலம் மற்றும் கர்வம் இவர்களுக்கு துன்பத்தை உண்டாக்கும். இவர்கள் தங்களை தனித்துவமாக்க முடிந்த அனைத்தையும் செய்வார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக யாரிடமும் நேரடியாகப் பேச விரும்ப மாட்டார்கள்.


மகரம் - ஜோதிடத்தின்படி, இந்த ராசிக்காரர்களும் தங்களைக் கூட்டத்தில் தனித்து காட்டிக்கொள்வார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பாசாங்கு தெளிவாகத் தெரியும், மேலும் அவர்கள் மற்றவர்களிடமிருந்து தள்ளியே இருப்பார்கள். அதேபோல் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு இவர்களிடம் மதிப்போ, முக்கியத்துவமா இருக்காது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுதாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR