அடல் பென்ஷன் யோஜனா: எந்தவொரு பணப்பிரச்சினையும் இன்றி முதுமைக்காலத்தை ஆனந்தமாக கழிய வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரும் தங்களின் சம்பாத்தியத்தில் இருந்து சேமிக்கின்றனர். வயதான காலத்தில் எந்தவித கஷ்டமும் இல்லமல் இருப்பதற்கான மிகப்பெரிய ஆதரவாக ஓய்வூதியம் கருதப்படுகிறது, ஆனால் நாம் சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். வயதான காலத்தில் இளமை காலம் போல் ஓடி ஓடி உழைக்க முடியாத நிலையில், உங்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு நீங்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் போது, ​​இந்த ஓய்வூதியம் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். நீங்கள் இளைஞராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் உங்கள் ரிடயர்மென்ட் காலத்தில் பொருளாதார ரீதியாக வளமாக்க முடியும், மேலும் நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரவாதமான ஓய்வூதியம்:
ரிடயர்மென்ட் காலத்தை ஆனந்தமாக அனுபவிக்கும் கனவை நீங்கள் அரசு நடத்தும் அடல் பென்ஷன் யோஜனா மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இது ஒரு ஓய்வூதியத் திட்டம்ஆகும், மேஉமி இந்த திட்டதிற்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் மற்றும் உங்கள் முதலீட்டைப் பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியத்தைப் பெறலாம். அதுமட்டுமின்றி இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Diwali 2023: தீபாவளி கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு ரயில்கள்! டிக்கெட் புக் செய்வது எப்படி?


மாதந்தோறும் 5000 ரூபாய் ஓய்வூதியம்:
இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம் ஆகும். அதாவது, நீங்கள் 40 வயதாகிவிட்டாலும், இதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயது ஆனவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். ஓய்வூதியத்தின் கணக்கீட்டைப் புரிந்து கொள்ள, உங்கள் வயது 18 என்று வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு மாதமும் ரூ.210 அதாவது ஒரு நாளைக்கு ரூ.7 மட்டுமே இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்வதன் மூலம், 60 வயதிற்குப் பிறகு மாதம் ரூ.5000 ஓய்வூதியத்தைப் பெறலாம். அதேசமயம் ரூ 1,000 ஓய்வூதியம் வேண்டுமானால் இந்த வயதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ 42 மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்.


5 கோடிக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்: 
அடல் பென்ஷன் யோஜனாவில் (Atal Pension Yojana) சேர்வதன் மூலம், கணவன்-மனைவி இருவரும் மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் பெறலாம். அதேசமயம் 60 வயதுக்குள் கணவர் இறந்துவிட்டால், மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். கணவன்-மனைவி இருவரும் இறந்தால், நாமினி முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவார். அடல் பென்ஷன் யோஜனா ஒரு ஓய்வூதிய திட்டமாக மிகவும் பிரபலமானது. 2015-16ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பிரபலத்தை இதில் சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் APY திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்குப் பிறகு உங்கள் வழக்கமான வருமானத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.


வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள்: 
APY திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் பெறுவீர்கள். இதில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். இந்த வரிச் சலுகை வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கணக்கைத் திறக்க, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சரியான வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரரிடம் மொபைல் எண் இருக்க வேண்டும். ஏற்கனவே அடல் ஓய்வூதியத்தின் பயனாளியாக இருக்கக்கூடாது. கடந்த 2022 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் விதிகளில் அரசு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்படி வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. இந்த மாற்றம் அக்டோபர் 1, 2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பான்-ஆதார் இல்லாமல் தங்கம் வாங்கலாம்.. ஆனா ஒரு கண்டிஷன், உடனே தெரிஞ்சிக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ