பாத்ரூமுக்குள் புகுந்த பாம்பு ஒன்று டாய்லெட் சின்க் உள்ளே பதுங்கியிருந்த புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பு என்ற உச்சரிப்பு உண்மையில் மக்களிடையே எந்தவிதமான இனிமையான எண்ணங்களையும் வெளிப்படுத்தாது. இந்த ஊர்வன உயிரினம் பெரும்பாலும் பலரிடையே அச்சத்தைத் தூண்டுகின்றன. எல்லா பாம்புகளும் ஆபத்தானவை அல்ல; ஆனால், பல மக்கள் அவற்றை கண்டாலே பயத்திலும், அருவருப்பிலும் ஆள்கின்றனர். 


இருந்தாலும் சிலர், பாம்பை அசால்டாக கையில் பிடித்து விளையாடும் அளவிற்குப் பாம்புகள் மீது பயம் அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சில நிமிடம் பாம்புகளைப் படித்து விளையாடுவதை நாம் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்போம். சிலர் பாம்புடன் விளையாடுவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வரலாகியுள்ளனர்.


 



இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் நிக்கோல் எரே எம்பவர் வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, பாத்ரூமில் உள்ள டாய்லெட் சின்க்கில் கருப்பாக ஏதோ தெரிந்திருக்கிறது. தலையை நீட்டி வெளியே பார்த்த அது ஒரு நீர் மலைப்பாம்பு. அதை கண்டு அதிர்ந்த நிக்கோல் உடனே காணுயிர் மீட்பு குழுவுக்கு தகவல் அளித்திருக்கிறார். அவர்கள் வந்து அந்த பாம்பை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.


ஆனால் பிரச்சினை அத்தோடு முடியவில்லை. அடுத்த நாள் நிக்கோலின் தங்கை அதே வீட்டில் உள்ள மற்றொரு பாத்ரூமிற்குள் சென்றபோது, அங்கே முகம் கழுவும் சின்க்கின் மேல் நீளமான நீர் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்திருக்கிறது. மீண்டும் காணுயிர் மீட்பு குழுவுக்கு தகவல் கொடுத்து அதை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். திடீரென பாத்ரூமிற்குள் காட்சி தரும் இந்த மலைப்பாம்புகள் எங்கிருந்து வருகின்றன என தெரியாமல் பயந்து போயிருக்கிறார்கள் நிக்கோல் குடும்பத்தினர்.