Keerthy Suresh: முகப்பொலிவிற்கு கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் 5 எளிய வழிமுறைகள்..!
Keerthy Suresh: தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சிரிப்பால் மட்டுமல்ல தனது அழகாலும் பலரை வசீகரிக்கும் திறன் கொண்டவர். அவரின் அழகு டிப்ஸ் சில..
தென்னிந்திய திரையுலக நடிகைகளுள் முதலிடத்தில் இருப்பவர், கீர்த்தி சுரேஷ். இவருக்கென்று இந்தியா முழுவதும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் கொஞ்சம் வெயிட் போட்டு, கொழுக் மொழுக் நாயகியாக இருந்த கீர்த்தி சுரேஷ், பின்நாட்களில் உடல் எடையை குறைத்துக் கொண்டார். இவரது சிரிப்பு, பேச்சு, நடிப்பு என அத்தனையும் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்று. குறிப்பாக கீர்த்தியின் முகப்பொலிவு குறித்த ரகசியம் பல பெண்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.
எக்கச்சக்க மேக்-அப்..இருந்தாலும் இயற்கை அழகு..
நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், திரைப்பட விழாக்கள் உள்பட, எதற்கு சென்றாலும் மேக்-அப்தான் போட்டாக வேண்டும். அதிலும், கேமராக்களின் முன்பு நடிக்கும் போது..கேட்கவே வேண்டாம். ஆனால், எவ்வளவுதான் மேக்-அப் போட்டாலும் இயற்கை அழகிலும் மனதை அள்ளுகிறார், கீர்த்தி. இதற்கு காரணம், இவரது ஸ்ட்ரிக்டான ஆரோக்கிய உணவுகளும், உடற்பயிற்சிகளும்தான். இதனால்தான், எந்த மேக்-அப்பும் இவரது சருமத்தை ஒன்றும் செய்ய முடிவதில்லை.
மேலும் படிக்க | தட்கல் ரயில் டிக்கெட் புக் பண்ணணுமா... கன்பர்ம் சீட் கிடைக்க சில டிப்ஸ் இதோ!
நிலையான நீர்சத்து:
என்னதான் நாம் உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஆரோக்கியமாக சாப்பிட்டு உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், நாம் செய்ய மறக்கும் ஒரு முக்கிய விஷயம், தண்ணீர் குடிப்பது. கீர்த்தி சுரேஷின் டாப் அழகு குறிப்புகளுள் முதல் இடத்தில் இருப்பது நீர்சத்தை நிலையாக வைத்திருப்பதுதான். இதற்காக கீர்த்தி, அதிக அளவில் தண்ணீர் குடிப்பாராம். கீர்த்தியின் முகப்பொலிவிற்கு முக்கிய காரணம், இப்படி தண்ணீர் அதிகமாக குடிப்பதுதானாம். அதனால், நீங்களும் நிறைய தண்ணீர் குடித்து ரிசல்டை அனுபவியுங்கள்.
திடமான உடல்:
கீர்த்தி, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிடுவார். இதைப்பார்த்து விட்டு நீங்களும் யோகா செய்கிறேன் என்ற முயற்சியில் இறங்க வேண்டாம். கீர்த்தியின் உடல் வாகுக்கு, யோகா பொருந்திகிறது, அதனால் அவர் உரிய பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி யோகாசனம் செய்கிறார். அதுபோல, உங்களுக்கு எந்த வகையான உடற்பயிற்சி பொருந்துகிறதோ, அதை செய்து உங்கள் உடலையும் உடல் எடையையும் திடமாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்கின் கேர்:
அதிகமான மேக்-அப் மற்றும் காஸ்மட்டிக் பொருட்களுக்கு ஆளாக்கப்படுவதால் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகைகள் ஸ்கின் கேர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது வழக்கம். அது, இயற்கையாகவும் இருக்கலாம். சமயங்களில் நம்பகத்தனமான ப்ராண்டிலிருந்து பெறப்பட்ட க்ரீம்களையும் சருமத்தை பயன்படுத்த உபயோகித்து கொள்ளலாம். கீர்த்தி, தனது சருமத்தை சுத்தம் செய்வது, டோன் செய்வது மற்றும் மாய்ஸ்ட்ரைசர் தடவுவது என தனது சருமத்தை பாதுகாத்து கொக்கிறார். உங்கள் சருமத்தை பாதுகாக்க எந்த வழி ஏதுவாக இருக்கும் என ஒரு தோல் மருத்துவரை (dermatologist) சந்தித்து ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.
இயற்கை பொருட்களை பேணுங்கள்:
கீர்த்தி, ரசாயனம் கலக்காத அழகு பொருட்களின் விரும்பியாம். ஷூட்டிற்கு செல்லாத சமயங்களில், குறைவான அழகு சாதன பொருட்களையே கீர்த்தி உபயோகிப்பாராம். நீங்கள் அடிக்கடி மேக்-அப் போடுபவராக இருந்தால், வாரத்தில் ஏதேனும் இரண்டு நாட்கள் எந்த அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்தாமல் இருந்து பார்க்கலாம். இதனால் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டால், இதையே பின் தொடருங்கள்.
நீங்கள் அழகுதான்:
நீங்கள் எந்த நிறமாக இருந்தாலும் சரி, எந்த அளவாக இருந்தாலும் சரி நீங்கள் உண்மையிலேயே அழகுதான். நாம் திரையில் பார்க்கும் நாயகிகளும் உங்களை போன்ற சக பெண்தான் என்பதை மறவாதீர்கள். என்ன முயற்சி எடுத்தாலும் அவர்களை போல மாற முடியாது. ஏனென்றால் அவர்கள் திரைக்கு முன்னர் கச்சிதமாக தோன்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. நாம், நமது இயல்பான வாழ்க்கைக்கு ஏற்றவாறு, நடிகைகள் கூறுவதில் சில அட்வைஸ்களை மட்டும் ஏற்றுக்கொண்டால், மனரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி மகிழ்ச்சியாக வாழலாம்.
மேலும் படிக்க | Sonam Kapoor: 13 வயதில் பாலியல் கொடுமையை அனுபவித்த பிரபல நடிகை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ