பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பரவலாக முன்வைக்கப்படும் கேள்விகளில் ஒன்று, "உங்கள் அனுபவத்தை பற்றி கூறுங்கள்" என்பது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கேள்வி எவ்வளவு கொடுமையான வலி கொடுக்கும் என பாதிக்கப்பட்டவர்கலால் மட்டுமே உணர முடியும், இந்த உணர்வை மற்றவர்களும் உணரவேண்டும் எனும் நோக்கில், பெல்ஜியத்தின் புருசெல் நாகரில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


'What Were You Wearing?' என்னும் தலைப்பில் ஒருங்கினைக்கப்பட்ட இந்த கண்காட்சியில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களின் ஆடைகள் (பலாத்காரத்தின் போது அணிந்திருந்த ஆடை) காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
பைஜாமாக்கள், டிராக்ஷூட்ஸ் மற்றும் ஒரு குழந்தையின் என் லிட்டில் போனி ஷர்ட் போன்ற பொருட்கள் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து பெற்று இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.



இந்த காண்காட்சியின் நோக்கமானது, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையினை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பது தான். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆடை ஒரு தூண்டுதல் காரணி இல்லை என்பதை உனர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த கண்காட்சியை காண வருவோரின் நெஞ்சம் நிச்சையம் கரையும் என்பதில் ஐயம் இல்லை., 


உன்மையில் ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைக்கு தூண்டுதல் காரணியாய் அமைகிறது என தனது பகுத்தறிவு கருத்துகளை முன்வைக்கும் அறிவாலிகளுக்கு இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சிறுகுழந்தைகளின் ஆடை சரியான பதிலளிக்கும்.