பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான ஒன்று.  தற்போது விடுமுறை நாட்கள் தொடங்கி உள்ளது.  பலரும் இந்த நாட்களில் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்வது வழக்கம். தொடர் விடுமுறைகளில் பல நாட்களாக செல்ல திட்டமிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன், நண்பர்களுடன் செல்வர்.  பயணம் செய்யும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று பட்ஜெட்.  நமது பயணம் நமது பட்ஜெட்டை மீறாமல் பார்த்து கொள்வது அவசியம்.  தென்னிந்தியாவின் சில இடங்கள் மனதிற்கும் நிம்மதியையும், சுற்றிப்பார்க்க நிறைய இடங்களையும் கொண்டுள்ளன.  கம்மி பட்ஜெட்டில் சென்னையில் இருந்து சுற்றி பார்க்க கூடிய இடங்களை பற்றி பார்ப்போம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோடியில் புரளும் நடிகை தமன்னா.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


பாண்டிச்சேரி 


பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படும் புதுச்சேரி தமிழ்நாட்டின் கீழ் வரும் யூனியன் பிரதேசமாகும். 1954 வரை பிரஞ்சு காலனியாக இருந்தது.  மரங்கள் நிறைந்த தெருக்கள், கடலோர காற்று என இயற்கை எழில் நிறைந்த இடமாக இருக்கும்.  பாரதி அரசு பூங்கா, ஜவஹர் அருங்காட்சியகம், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், காரைக்கால், ரோமெய்ன் ரோலண்ட் நூலகம், அரிக்கமேடு, மணக்குள விநாயகர் கோவில், ஆரோவில் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.


தேக்கடி


தேக்கடி என்பது பெரியார் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள இடம் ஆகும், இது இந்தியாவின் கேரள மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத்தலமாகும். தேக்கடி என்ற பெயர் தேக்கு என்ற சொல்லில் இருந்து வந்தது. டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வெப்பநிலை குறைவாகவும், ஏப்ரல்-மே மாதங்களில் அதிகபட்சமாகவும் இருக்கும். இந்த இடம் தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ளது. புலி, யானை, காட்டெருமை மற்றும் மான் போன்ற வன விலங்குகள் இங்குள்ள பெரியார் தேசிய பூங்காவில் உள்ளது. தேக்கடி அதன் அடர்ந்த, பசுமையான காடுகளுக்கு பெயர் பெற்றது.


ஏற்காடு


ஏற்காடு தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைவாழ் நகரமாகும். இந்த இடம் அதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலைக்கு பெயர் பெற்றது. ஏற்காடு தோட்டங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. ஏற்காடு ஏரி, லூப் ரோடு, பகோடா பாயின்ட், கரடி குகை, பகோடா பாயின்ட், பட்டு பண்ணை, மற்றும் ரோஜா தோட்டம், கொட்டச்சேடு தேக்கு காடு, கிள்ளியூர் அருவி போன்றவை பிரபலமான சுற்றுலா தளங்கள் ஆகும்.


வர்கலா கடற்கரை


வர்கலா கடற்கரை கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, இது குட்டி கோவா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியான அரேபியக் கடலில் அமைந்துள்ளது. இங்குள்ள தங்கும் விடுதிகள் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன.  வர்கலாவில் சிறந்த அழகிய கடற்கரைகள், மலைகள், ஏரிகள், கோட்டைகள், கலங்கரை விளக்கங்கள், இயற்கை மீன்வளம் மற்றும் நீரூற்றுகள் உள்ளன.


ராமேஸ்வரம்


தமிழ்நாட்டின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள இடம் தான் ராமேஸ்வரம். பலரும் புனித யாத்திரைக்கு இங்கு வருகின்றனர்.  ராமநாதசுவாமி கோயில் இங்குள்ள முக்கிய சுற்றுலாத்தலமாகும்.  தனுஷ்கோடி பீச் பாயின்ட், பாம்பன் பாலம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம், ராமர் பாதம் போன்ற இடங்களை இங்கு கண்டு மகிழலாம். 


மேலும் படிக்க | Best Tourist Places: மதுரைக்கு அருகில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ