நம்மில் பலர், பெரும்பாலும் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை பற்றிய திட்டமிடல் இல்லாமல் இருக்கிறோம். சேமிப்பில் கவனம் செலுத்துவதில்லை. ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான  வாழ்க்கை வாழ, மக்கள் சரியான சமயத்தில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரியான நேரத்தில்  தொடங்கப்படும் முதலீடு நிறைய லாபத்தை கொண்டு வரும் என்பது உறுதி. ஓய்வூதியத்திற்கான ஐந்து சிறந்த முதலீட்டு திட்டங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். 


LIC சரல் ஓய்வூதிய திட்டம்


எல்.ஐ.சி சரல் ஓய்வூதிய திட்டம்ஒரு வருடாந்திர திட்டம். 40 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டுதோறும்  முதலீடு என உங்களுக்கு ஏற்ற வகையிலான ஆப்ஷனை  தேர்வு செய்யலாம். இதில், குறைந்தபட்சம் ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும், அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.


தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)


தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நிலையான ஓய்வூதியத்தைப் பெறலாம். மூன்று வருடங்களுக்கு முதலீடு செய்த பின்னர் பணத்தை எடுக்க வசதியும் உள்ளது. மொத்த வைப்புத் தொகையில் 25 சதவீதத்தை முதிர்வுக்கு முன்பு திரும்பப் பெறலாம். வீடு கட்டும் போது அல்லது  பிற அவசர காலத்திலும் நீங்கள் பணத்தை எடுக்கலாம்.


அடல் ஓய்வூதிய திட்டம்


அடல் பென்ஷன் திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய அனைவரும் முதலீடு செய்யலாம். மேலும், இந்த திட்டத்தில். அரசாங்கம் தன் சார்பாகவும் பிரீமியம் தொகை செலுத்துகிறது.  இந்தத் திட்டத்தின் பயனைப் பெறும் மக்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகையில்,  50 சதவீதம் அல்லது ஆண்டுதோறும் 1000 ரூபாய் என இதில் எது குறைவானதோ, அந்த அளவிற்கு அரசு தனது பங்கை அளிக்கும். வேறு எந்த பாதுகாப்புத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கும்.


ALSO READ | இந்த ‘50’ பைசா உங்களிடம் இருந்தால், நீங்களும் லட்சாதிபதி தான்..!!


 


பிரதம மந்திரி வய வந்தனா திட்டம்


இந்தத் திட்டம் 10 வருடங்களுக்கானது, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வயது 60 ஆக இருக்க வேண்டும். இதில், ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு, மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில், 7.40 சதவீத வட்டியைப் கிடைக்கும். இதில் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ .15 லட்சம்.


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizens Saving Scheme)


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இதில் செய்யக்கூடிய அதிகபட்ச முதலீடு ரூ .15 லட்சம். இதில், ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் திறக்க முடியும். இதில் 7.4 சதவீத விகிதத்தில் வருமானம் கிடைக்கும். இதில், ஒருவர் ரூ .1000 முதலீட்டில் தொடங்கலாம். அதன் குறைந்தபட்ச முதலீட்டு கால அளவு ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த திட்டதில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சேரலாம்.


ALSO READ | வீட்டில் இருந்தே மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க பொன்னான வாய்ப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR