புதுடெல்லி: Indian Railway News: அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ரயில்வே புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கொரோனா வைரஸால் மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், அரசும் இதில் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மூன்றாவது அலை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ரயில்வே மீண்டும் கோவிட் தொடர்பான புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே முக்கிய முடிவு எடுத்துள்ளது
நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் தங்கள் சொந்த மட்டத்தில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில மாநிலங்களில், ரயில்வே (Indian Railways) மற்றும் பிற போக்குவரத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ரயில்வே முக்கிய முடிவை எடுத்துள்ளது.


ALSO READ | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி..!!


தடுப்பூசி இல்லாமல் ரயிலில் நுழைய முடியாது
உள்ளூர் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு புதிய விதிமுறையை தெற்கு ரயில்வே (Southern Railway) வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பு மருந்தைப் பெறாமல் ரயில் நிலையத்திலோ அல்லது ரயிலிலோ நுழைய முடியாது. உள்ளூர் ரயில்களில் 'No Vaccine, No Entry' கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பயணிகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு டோஸ் எடுத்தாலும், ரயிலில் பயணிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.


தடுப்பூசி சான்றிதழ் காட்டப்பட வேண்டும்
கொரோனா தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை ரயில் பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. பயணச்சீட்டு அல்லது மாதாந்திர சீசன் டிக்கெட் (MST) வழங்கும் போது, ​​பயணிகள் தடுப்பூசி சான்றிதழைக் காட்டுவதும் கட்டாயமாகும். தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கையை கருத்தில் கொண்டு, மற்ற இடங்களிலும் இதே விதிகளை அமல்படுத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ALSO READ | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR