PPF திட்டத்தில் அரசு செய்த பெரிய மாற்றம்: புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
PPF Scheme Latest Update: பிபிஎஃப் திட்டத்தின் விதிகளில் அரசாங்கம் என்னென்ன மாற்றங்களைச் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பிபிஎஃப் திட்டம் சமீபத்திய புதுப்பிப்பு: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. நீங்களும் பிபிஎஃப் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்திருந்தால் அல்லது முதலீடு செய்யும் திட்டம் இருந்தால், இப்போது இந்த திட்டத்தின் விதிகளில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பொதுமக்களுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு இந்த திட்டங்களில் அவ்வப்போது மாற்றம் செய்து கொண்டே இருக்கிறது.
இந்த புதிய விதிகளைப் பற்றி உங்களுக்கு சரியான நேரத்தில் தெரியாவிட்டால், நீங்கள் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடலாம். பிபிஎஃப் திட்டத்தின் விதிகளில் அரசாங்கம் என்னென்ன மாற்றங்களைச் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
குறைந்த தொகை கொண்டும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்:
பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும் பழக்கம் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. குறைந்த தொகை கொண்டும் இனி நீங்கள் இந்த திட்டம் மூலம் லாபம் காண முடியும். இதுபோன்ற அரசாங்க திட்டங்களில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிபிஎஃப் திட்டத்தில், அரசு சார்பில் 7.10 சதவீத வட்டி கிடைத்து வருகிறது.
மேலும் படிக்க | வீட்டில் உள்ள தங்க நகைகளை வைத்து இப்படியும் சம்பாதிக்கலாம்! தெரிந்து கொள்ளுங்கள்!
மாதம் ஒருமுறை பணம் டெபாசிட் செய்யப்படுகிறது
குறைந்தபட்சம் 1 வருடத்தில் 500 ரூபாய் வரை பிபிஎஃப் -இல் முதலீடு செய்யலாம்.1 வருடத்தில் 1.5 லட்சம் ரூபாய் வரை பிபிஎஃப் -இல் டெபாசிட் செய்தால் வரி விலக்கு பலன் கிடைக்கும். சந்தாதாரர்கள் விரும்பினால் ஒவ்வொரு மாதமும் அதில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
15 ஆண்டுகளுக்குப் பிறகும் கணக்கு மூடப்படாது
இந்த திட்டத்தில் முதலீடு செய்வது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நின்றுவிடும். ஆனால் நீங்கள் இதில் அதிக முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆனால், அப்படிப்பட்ட நிலையில், நீங்கள் 1 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.
கணக்கை எப்படி திறப்பது
பிபிஎஃப் கணக்கைத் திறக்க, நீங்கள் படிவம்-1 ஐ சமர்ப்பிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு படிவம்-4 இல் விண்ணப்பிக்க வேண்டும்.
கடன் வசதி கிடைக்கும்
பிபிஎஃப் கணக்கில் நீங்கள் எளிதாக கடன் பெறலாம். உங்கள் பிபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் 25% மட்டுமே கடனாகப் பெற முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ