Indian Railways: இரவு பயணத்திற்கான விதிகளில் மாற்றம், இனி இதையெல்லாம் செய்ய முடியாது
Indian Railways: ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது தங்கள் இருக்கை, கம்பார்ட்மெண்ட் அல்லது கோச்சில் எந்தப் பயணிகளும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, சத்தமாக பாடல்களைக் கேட்கவோ முடியாது.
இந்திய ரயில்வே: இரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது, நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடக்கூடும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது பொதுவாக ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் தெரியும். இரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே சமீபத்தில் செய்த மாற்றம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது தங்கள் இருக்கை, கம்பார்ட்மெண்ட் அல்லது கோச்சில் எந்தப் பயணிகளும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, சத்தமாக பாடல்களைக் கேட்கவோ முடியாது. பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கவும், பயணத்தின் போது நிம்மதியாக உறங்கவும் ரயில்வே புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பல பயணிகள் தங்கள் கோச்சில் ஒன்றாகப் பயணிப்பவர்கள் தொலைபேசியில் சத்தமாகப் பேசுவதாகவும் அல்லது இரவு வெகுநேரம் வரை பாடல்களைக் கேட்பதாகவும் அடிக்கடி புகார் அளித்துள்ளதாக ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துணை அல்லது பராமரிப்பு ஊழியர்களும் சத்தமாக பேசுவதாக சில பயணிகளிடம் இருந்து புகார் எழுந்தது. இதுதவிர பல பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் மின்விளக்குகளை எரிய வைப்பதால் தூக்கம் கலைவதாகவும் பலர் புகார் அளித்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே புதிய விதியை வகுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பயணிகள் விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: ரயில் பயணத்தில் மதுபானம்...புதிய விதி
புதிய விதிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்
ரயிலில் பயணம் செய்யும் போது இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் சத்தமாக பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. புதிய விதிகளின்படி, இரவுப் பயணத்தின் போது பயணிகள் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் சத்தமாகப் பேசவோ, இசையைக் கேட்கவோ முடியாது. பயணிகள் யாராவது புகார் அளித்தால், அதைத் தீர்க்கும் பொறுப்பு ரயிலில் இருக்கும் ஊழியர்களின் பொறுப்பாகும்.
இந்திய ரயில்வேயின் இன்னும் சில விதிகளின் விவரங்கள்
ரயிலில் மதுபானம் கொண்டு செல்ல முடியுமா?
ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக அவற்றின் சொந்த விதிகள் உள்ளன. அரசியல் சட்டத்தில், மதுபானம் தொடர்பான விதிகளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை எடுத்துச்சென்றாலோ, அப்படி செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ரயிலில் தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருட்களை யாரேனும் வைத்திருந்தால், அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மறுபுறம், இந்த பொருளால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அந்த நபர் அதையும் ஈடுசெய்ய வேண்டும்.
இரவில் போனை சார்ஜ் செய்ய முடியாது
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது. ரயிலில் எந்த வித விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வே இப்படி செய்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்கள் தொலைபேசியை சார்ஜிங்கில் போட்டுவிட்டு அது முழுமையாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜை அணைக்க மறந்துவிடுகிறார்கள். சார்ஜிங்கில் போட்டுவிட்டு பயணிகள் தூங்கி விடுவதால், சார்ஜை மூட அவர்களுக்கு பல சமயம் நினைவிருப்பதில்லை.
மேலும் படிக்க | உங்கள் ரயில் டிக்கெட் RAC ஆ..? அப்போ கட்டாயம் இந்த செய்தியை படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ