புதுடெல்லி: ஆவலுடன் காத்திருக்கும் சுமார் ஆறு கோடி EPF சந்தாதாரர்களுக்கு நரேந்திர மோடி அரசு ஒரு பெரிய போனசை வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-20 ஆம் ஆண்டிற்கான வட்டியை அவர்களது பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளில் EPFO எற்கனவே வரவு வைக்கத் தொடங்கியுள்ளது.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார் வியாழக்கிழமை (டிசம்பர் 31) இந்த முடிவை அறிவித்து, PF சந்தாதாரர்கள் டிசம்பர் 31 முதல் தங்கள் PF தொகைக்கு 8.5 சதவீத வட்டியைப் பெறத் தொடங்குவார்கள் என்று கூறியிருந்தார்.


"2019-2020 ஆம் ஆண்டிற்கான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 6 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் PF தொகைக்கு 8.5 சதவீத வட்டியைப் பெறுவார்கள். இவை உங்களுக்கு இன்று முதல் கிடைக்கத் துவங்கும் வகையில் நாங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளோம்” என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் நேற்று தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், “2020 ஆம் ஆண்டு சூழ்நிலைகள் யாருக்கும் சாதகமாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதித் தொகையில் 8.5 சதவீத வட்டியைக் கொடுக்க முயற்சிப்போம் என்று நாங்கள் கூறியபோது மக்கள் ஆச்சரியப்பட்டனர். இன்று, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற நான் இங்கு வந்துள்ளேன்." என்றார்.


ALSO READ: இன்று முதல் துவங்குகிறது சரல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே


EPFO சந்தாதாரர்கள் தங்கள் PF இருப்பை (PF Balance) வீட்டிலிருந்தபடியே, எஸ்எம்எஸ், ஆன்லைன், மிஸ்டு கால், மற்றும் உமங் செயலி ஆகிய நான்கு வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.


EPF அகௌண்ட் பாலன்சை ஆன்லைனில் எப்படி பார்ப்பது:


-epfindia.gov.in என்ற வலைத்தளத்தில் லாக் இன் செய்யவும்.


-உங்கள் UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்


-e-Passbook-ஐ கிளிக் செய்யவும்


-நீங்கள் அனைத்து விவரங்களையும் அளித்தவுடன், ஒரு புதிய பக்கம் திறக்கும்.


-இப்போது உறுப்பினர் ஐடியைத் திறக்கவும்


-இப்போது உங்கள் கணக்கில் மொத்த EPF balance எவ்வளவு உள்ளது என்பதை நீங்கள் காணலாம்.


EPF அகௌண்ட் பாலன்சை உமங்க் செயலி மூலம் எப்படி பார்ப்பது:


-UMANG செயலியைத் (UMANG App) திறக்கவும்.


-EPFO ஐக் கிளிக் செய்யவும்.


-Employee Centric Services-ஐக் கிளிக் செய்யவும்.


-View Passbook ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.


-உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்


-உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவீர்கள்


-இப்போது நீங்கள் உங்கள் EPF இருப்பை சரிபார்க்கலாம்


எஸ்எம்எஸ் வழியாக EPF இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது


மொபைல் எண்ணைத் தவிர, UAN போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பியும் தங்கள் PF விவரங்களைப் பெறலாம். இதற்கு, 'EPFOHO UAN' என்று எழுதி 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்ய வேண்டும்.


மிஸ்டு கால் மூலம் EPF இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது


UAN போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட EPFO சந்தாதாரர்கள், UAN-ல் பதிவுசெய்யப்பட்ட தங்கள் மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் தங்கள் பிஎஃப் விவரங்களைப் பெறலாம்.


ALSO READ: Aadhaar Card-ல் எத்தனை முறை உங்கள் பெயரை மாற்ற முடியும் தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR