இந்தியா முழுவதும் வரும் 2019 ஜூலை மாதம் முதல் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமங்கள்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் சார்பில், அடுத்த ஆண்டு ஜூலை முதல் ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு புத்தகம் ஆகியவற்றை ஒரே மாதிரியாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 


ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு புத்தகத்தை மோசடியாளர்கள் போலியாக தயாரிப்பதை தடுக்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் அதில் இடம்பெறவுள்ளன. அதாவது, ஓட்டுநர் உரிமம், பதிவு புத்தகம் ஆகிய இரண்டிலும் மைக்ரோசிப் மற்றும் QR கோடு இனி இடம்பெற்றிருக்கும். அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள், ATM போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான தகவல் தொடர்பு வசதிகள் அதில் இடம்பெறும்.
 
புதிய ஓட்டுநர் உரிமத்தில், சம்பந்தப்பட்ட நபர் விபத்தில் பலியாகும் பட்சத்தில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறாரா என்ற தகவல் இடம்பெறவுள்ளது. அந்த நபர் குறித்து தொடர்பு கொள்ள வேண்டிய அவசர தொலைபேசி எண், ரத்த வகை உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். இதுதவிர, வாட்டர் மார்க், ஹோலோகிராம், மத்திய, மாநில அரசுகளின் சின்னங்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.



நாடு முழுவதிலும் நாள் ஒன்றுக்கு புதிதாக வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் எண்ணிக்கை 32,000 ஆக உள்ளது. இதேபோன்று 43,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன அல்லது புதுப்பிக்கப்படுகின்றன.