ரயில்வே பயணிகளுக்கு மிகப்பெரிய செய்தி, IRCTC புதிய விதி அமல்
Indian Railways : ரயில்வே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வேயால் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய இரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியுள்ளது: நீங்கள் வழக்கமாக ரயிலில் பயணம் செய்து, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தால், இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். உண்மையில், ஐஆர்சிடிசி பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை தற்போது மாற்றியுள்ளது. புதிய விதியின்படி, டிக்கெட் முன்பதிவு செய்ய உங்கள் அக்கவுண்ட்டை வெரிபை செய்ய வேண்டும்.
வெரிபிகேஷன் இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசியின் விதிகளின்படி, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை வெரிபை செய்ய வேண்டியது கட்டாயமாகும். மேலும் உங்களின் ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் வெரிபை இல்லாமல், ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
புதிய விதியின் முழு விவரம்
உண்மையில், கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாத ஐஆர்சிடிசி கணக்கின் பயனர்கள் பலர் உள்ளனர். அத்தகையவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். உங்களுக்கும் நீண்ட நாட்களாக டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், முதலில் வெரிபை செய்ய வேண்டியது கட்டாயமாகும். அதன் முழு செயல்முறையை தெரிந்து கொள்வோம்...
மொபைல் மற்றும் ஈமெயில் வெரிபிகேஷன் செய்வது எப்படி செய்துகொள்ளுங்கள்
* ஐஆர்சிடிசி ஆப்ஸ் அல்லது இணையதளத்திற்குச் சென்று வெரிபை விண்டோவை கிளிக் செய்யவும்.
* இங்கே நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் ஈமெயில் ஐடியை உள்ளிட வேண்டும்.
* இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, வெரிபை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
* வெரிபை என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் மொபைலில் ஓடிபி வரும், அதை உள்ளிட்டு மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்.
* இதேபோல், மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட ஓடிபி ஐ உள்ளிட்ட பிறகு, உங்கள் மெயில் ஐடி சரிபார்க்கப்படும்.
* இப்போது உங்கள் கணக்கில் இருந்து எந்த ரயிலுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம்.
மொத்தம் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்
ரயில்வே பயணிகளுக்கான மற்றொரு பெரிய செய்தி என்னவென்றால், ஐஆர்சிடிசியின் ஒரு பயனர் ஐடியில் ஒரு மாதத்தில் அதிகபட்ச டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வரம்பை 12 இல் இருந்து 24 ஆக ரயில்வே உயர்த்தியுள்ளது. ஆம், இப்போது நீங்கள் ஆதார் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்னதாக இந்த எண்ணிக்கை 12 ஆக இருந்தது. இதேபோல், ஆதாருடன் இணைக்கப்படாத கணக்கில் இருந்து 6 டிக்கெட்டுகளுக்கு பதிலாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.