"வட இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் பௌர்ணமி நாள் அன்று அங்குள்ள மக்களால் ரக்ஷாபந்தன் (Raksha bandhan) பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
இப்பண்டிகையன்று பெண்கள் அவர்களுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கைகளில் "ராக்கி கயிற்றினை கட்டுவது வழக்கம்.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"அந்தப்பெண் சகோதரர்களாக நினைத்து யார் மீது கயிறு கட்டினாரோ அப்பெண்ணின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் சகோதரனாக நான் உறுதியாக இருப்பேன் என்று அவர் உறுதி கூறுவதாக கருதப்படும்.




"சகோதரனாக எண்ணி அப்பெண் எந்த ஆணிற்கு ராக்கி கயிறு  கட்டினாரோ அவருக்கு அந்த ஆண் பணம் மற்றும் பரிசு அளிப்பது வழக்கம். இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வடமாநிலங்களில் அங்கு வாழும் மக்களால் பிரபலமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது தென்னிந்தியாவிலும் ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர்.


"இதற்கு முன்னோட்டமாக "பா.ஜ.க(BJP) வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா (H.Raja) ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் டுவிட்டர்(Twitter)பக்கத்தில் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது ரக்ஷா பந்தன் (Raksha bandhan) வாழ்த்துக்கள்! என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Read Also | Red banana: செவ்வாழையின் சூப்பர் நன்மைகள்! யார் இதை சாப்பிடக்கூடாது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR